செவ்வாய், 5 செப்டம்பர், 2017

தமிழகத்தில் ஆட்சி என்பதே இல்லை! பா.ஜ.கவின் அதிகார வலை! -பீட்டர் அல்போன்ஸ் !


ராஜபாளையம் வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, “தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத, தேர்ந்தெடுக்கப்படாத பாஜக ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் எவ்வித அரசியல் செல்வாக்கும் இல்லாமல், ஆட்சியில் இருப்பவர்களின் பலவீனங்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, பின்வாசல் வழியாக நுழைந்து, தனது அதிகார வலையை தமிழகத்தில் பா.ஜ.க.விரித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்க கூடிய விளிம்பு நிலை மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் , விவசாயிகள், சிறுபான்மை மக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு விரோதமான ஆட்சி இந்திய அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் அதுபோல், அதிமுக மூலம் செயல்படுத்துவதற்கு பாஜக முயல்கிறது. இதைத் தடுத்து நிறுத்த மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டு இவர்களின் சதியை முறியடிப்பதற்கான நேரம் வந்திருக்கிறது. சமீப காலமாக கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக விற்கு ஆதரவாகப் பேசி வருகிறார். அவர் இப்படிப் பேசி வருவது, அவரை நன்கு அறிந்த எங்களைப் போன்றவர்களுக்கு வருத்தமளிக்கிறது. ஆட்சி என்று ஒன்று இருந்தால்தானே அதிமுகவை பற்றி பேச முடியும். தமிழகத்தில் ஆட்சியே இல்லை என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. -சி.என்.இராமகிருஷ்ணன்  நக்கீரன்

கருத்துகள் இல்லை: