செவ்வாய், 5 செப்டம்பர், 2017

"To-Let" மாத்துத்துணி இல்லாம அவசரமா அங்க ஓடுனவனுக்கு முதல் பரிசு, 50 ஆயிரம்

Jeyachandra Hashmi : மறக்கவே முடியாத மொமன்ட் இது. கேரளாக்கு போறதுக்காக அப்டி இப்டினு ஒதுக்கி வச்சுருந்த 3000 ரூபாய பர்ஸ்ல இருந்து யாரோ எடுத்துட்டாங்க. ரொம்ப மன உளைச்சல் ஆய்டுச்சு. சரி போக வேண்டாம்னு முடிவு பண்ணி சென்னைல நடந்த National Freedom Festival க்கு போனா, அங்க எங்க ‘களவு’ படத்துக்கு முதல் பரிசு. 25 ஆயிரம் பரிசுத்தொகை. அதான் காசு வந்துருச்சேனு போட்ருந்த ட்ரெஸ்ஸோட கோயம்பத்தூர்க்கு பஸ் ஏறிட்டேன். அங்க போய் தோழர் Feroz வீட்ல குளிச்சு ரெடியாகி Navanee தோழர் பைக்க எடுத்துட்டு அரக்க பரக்க பாலக்காட்டுக்கு போனேன்.
அங்க போனா எல்லாம் டீம் டீமா உக்காந்துருக்காங்க. என்னடா நாம மட்டும் தனியா வந்துருக்கோமேன்னு நெஜமா ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனா ‘To-Let’ படத்துக்கு விருதுனு அறிவிச்சதும் எழுந்த கைத்தட்டல் அத்தனையையும் மறக்கடிச்சுருச்சு.
அப்படியொரு கரகோஷம். எந்திச்சு மேடைக்கு போறதுல இருந்து, அவார்டு வாங்கிட்டு கீழ இறங்கி வந்து உக்கார்ற வரைக்கும் ஏதோ அவங்க டீம்ல ஒருத்தன் வாங்கற மாதிரி சந்தோஷமா பலமா கைத்தட்டி கத்தி விசிலடிச்சுட்டு இருந்தாங்க. என் லைஃப்ல என்னை சேர்ந்தவர்கள் யாருமே இல்லாம, முற்றிலும் தெரியாதவர்கள் மட்டுமே கொடுத்த மிகப்பெரிய கைத்தட்டல் இதுதான். ஒரு கலைஞனோட அதிகபட்ச எதிர்பார்ப்பு, சன்மானம், சந்தோஷம் இதான்னு நினைக்குறேன். அதனாலயே எனக்கிது ரொம்ம்ப ஸ்பெஷல். மாத்துத்துணி கூட இல்லாம அவசரமா அங்க ஓடுனவனுக்கு முதல் பரிசு, 50 ஆயிரம் பரிசுத் தொகை, செர்டிஃபிகேட், அவார்டுனு கை நிறைய, மனம் நிறைய கொடுத்து அனுப்ச்சாங்க.
ரொம்ப நன்றி Insight Creativegroup, படத்துக்காக கூட நின்ன தோழர்கள், மற்றும்...நான் சுத்தமா எதிர்பாராம, இந்த வீடியோவ எடுத்து, எடிட் பண்ணி அனுப்ச்ச கேரளால கிடைச்ச அந்த நண்பர்

கருத்துகள் இல்லை: