புதன், 6 செப்டம்பர், 2017

கௌரி லங்கேஷ் கொலை கல்புர்கி, தபோல்கர், பன்சாரேயை கொன்ற இந்து பயங்கரவாதிகளே ..


Gauri Lankesh : And... some of my `Braimin'/Bhakth friends want me to congratulate Modi for making Nirmala Sitaraman as def minister. remember, she is first time MP and has no administration experience.

கர்நாடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் இந்துத்துவ எதிர்ப்பாளருமான கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தின் அருகே, மூன்று முறை சுடப்பட்டார் என ஊடகங்கள் சொல்கின்றன. ‘கௌரி லங்கேஷ் பத்திரிகே’ என்ற வார இதழை நடத்தி வந்த கௌரி, வகுப்பு வாதத்துக்கு எதிராக குரல் எழுப்பிவந்ததால் வலதுசாரிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.
த வயர் இணையதளத்துக்கு, கௌரியின் நண்பரும் எழுத்தாளருமான கே. மருசிலதப்பா அளித்த பேட்டியில், ‘கௌரியின் கொலை அதிர்ச்சியை அளிக்கிறது. அவர் மிகவும் துணிச்சலானவர்; சங் பரிவார் கும்பலுக்கு எதிராக துணிச்சலான கருத்துக்களை முன்வைத்தவர். கல்புர்கி, தபோல்கர், பன்சாரே ஆகியோரைக்கொன்ற அதே நபர்கள்தான் கௌரி லங்கேஷையும் கொன்றிருக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.
 2008ஆம் ஆண்டு பாஜக எம்பியின் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டு, கைதாகி பிணையில் வெளிவந்தவர் கௌரி. பாஜக, சங்பரிவார் போன்ற வலதுசாரி அமைப்புகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த காரணத்தால், அவர்களின் கோவத்துக்கு ஆளானவர் கௌரி.
கௌரியின் படுகொலைக்கு பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.Mamata Banerjee‏Verified account @MamataOfficial Saddened at the killing of journalist Gauri Lankesh in Bengaluru. Most unfortunate. Very alarming. We want justice

கருத்துகள் இல்லை: