சனி, 9 செப்டம்பர், 2017

வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி, நீட்'டை மறுத்து சமூக நீதியை நிலைநாட்டியது


juliet.jenifar.: நீட்டை ஏற்க மறுத்து மாணவர் சேர்க்கையை நிறுத்தியது புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை!
மிகவும் பின்தங்கிய பகுதிகளில் தங்கி, ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வும் பண்பும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதற்காகவே மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறோம். நீட் மூலம் அத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறி, 100 எம்பிபிஎஸ் இடங்களையும் 60 உயர் சிறப்பு மருத்துவ இடங்களையும் நீட் அடிப்படையில் நிரப்ப மறுத்து, தனது தியாகத்தின் மூலம் வலிமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது சி.எம்.சி.
சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி, நீட்'டை மறுத்து, சமூக நீதியை நிலைநாட்டி, தமிழகத்தின் மிகச்சிறந்த முன்னுதாரணமான கல்லூரி ஆகிறது. அக்கல்லூரிக்கும், இந்தத் தீர்மானத்தை எடுக்கும் வலிமையையும் தம் அரசியல் தெளிவையும் வெளிப்படுத்திய கல்லூரி பணியாளர்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துகளும், சமூகநீதி வணக்கங்களும்!

கருத்துகள் இல்லை: