புதன், 6 செப்டம்பர், 2017

21 பொதுத்துறை வங்கிகளை 15 வங்கிகளாகக் குறைக்க முயற்சி .. வங்கிகள் கொழுக்கும் மக்கள் வங்குரோத்து?

tamil.goodreturns.in- prasanna. டெல்லி: சமீபத்தில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதன் கிளை வங்கிகள் அனைத்தையும் முழுமையாக இணைத்துக்கொண்டு ஒற்றை வங்கியாகச் செயல்படத் துவங்கியது. இதேபோல் தற்போது பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃ பரோடா ஆகிய வங்கிகள் நாட்டில் இருக்கும் பிற வங்கிகளைக் கைப்பெற்ற உறுதியாக நிற்கிறது.
இந்த 3 வங்கிகளும் பிற வங்கிகளைக் கைப்பற்றுவதில் பல கோரிக்கைகள், தகுதிகள், மத்திய அரசின் ஒப்புதல்கள் எனப் பல இருந்தாலும். எதற்காக இந்த இணைப்பு நடவடிக்கையை, தற்போது மத்திய அரசு விடாப்பிடியாகக் கொண்டுள்ளது. மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் 21 பொதுத்துறை வங்கிகளை 15 வங்கிகளாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் நாட்டின் பொருளாதாரத் தரம் உயர்த்த முடியும் என்பது மத்திய அரசின் வாதம். இந்த இணைப்பின் மூலம் இந்திய சந்தையில் மட்டுமல்லாமல் உலகச் சந்தையிலும் போட்டி போட்டும் அளவிற்கு வலிமையான வங்கிகளை உருவாக்க முடியும் என நிதியமைச்சகம் நம்புகிறது.

எஸ்பிஐ இணைப்பின் மூலம் உலகின் சக்திவாய்ந்த வங்கிகளில் 50 இடத்திற்கு முதல் முறையாக நுழைந்த குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃ பரோடா ஆகிய வங்கிகள் பொதுத்துறை வங்கிகளில் வலிமையாக இருக்கும் நிலையில், இந்த 3 வங்கிகள் மட்டுமே பிற பொதுத்துறை வங்கியை கைப்பற்ற கூடிய அளவிற்கு வலிமையாக உள்ளது.
ஆனால் இந்தக் கைப்பற்றலும், இதன் பின் வங்கி செயல்பாட்டில் நடக்கக் கூடிய மாற்றங்களை இயல்பாக வைத்திருக்கவும் மத்திய அரசு சுமார் 1000 கோடி ரூபாய் வங்கித்துறையில் முதலீடு செய்ய வேண்டும். மத்திய அரசு முதலீடு செய்ய வேண்டிய 1000 கோடி ரூபாய், தற்போது வருடாந்திர செலவுகளை விட 10 மடங்கு அதிகமாகும்.
இத்தகைய பெரிய முதலீட்டில் இப்படிப்பட்ட வங்கி இணைப்பை செய்யவே நிதியமைச்சகமும், மத்திய அரசும் திட்டமிட்டு வருகிறது. வங்கிகள் மத்தியிலான இணைப்பை எளிமையாகச் செய்துவிடமுடியுமா என்ன..?கை வங்கிகள் இணைக்கப்படுவதிலும் கைப்பற்றுவதிலும் எவ்விதமான பிரச்சனையும் இல்லை ஆனால் சில முக்கியக் கோரிக்கைகளை ஞ்சாப் நேஷ்னல் வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃ பரோடா ஆகிய வங்கிகள் முன்வைத்துள்ளது.
1. கைப்பற்றப்படும் வங்கி லாபகரமானதாக இருக்க வேண்டும்.
2. கைப்பற்றுதலுக்குப் பின்பு குறைந்தபட்சம் 3 வருடம் தற்போது இருக்கும் நிர்வாகமே முழுமையான பணிகளைச் செய்ய வேண்டும். இணைப்பும் வங்கிகள் செயல்பாடும் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்பு நிர்வாகத்தை விட்டுவிடலாம்.
3. பிற வங்கியை கைப்பற்ற வேண்டுமென்றால் மத்திய அரசு எங்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.
எனப் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் நடத்திய முக்கியக் கூட்டத்தில் பொதுத்துறை வங்கி தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதன் மூலம் அடுத்தச் சில நாட்களில் மத்திய அரசின் இக்கோரிக்கைகளின் நிலைப்பாடு தெரியவரும்

கருத்துகள் இல்லை: