சனி, 9 செப்டம்பர், 2017

தமிழ்நாட்டில் மட்டும் பார்ப்பனீயம் எப்போதும் எடுப்படுவதேயில்லை.

ganesh.babu.: "நீட்" தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் வெடித்திருக்கும் இந்த எதிர்ப்பும், போராட்டங்களும் கேரளா, மேற்கு வங்காளம், கர்நாடகம் போன்ற ஓரளவு முற்போக்கு மாநிலங்களில் கூட எழவில்லையே கவனித்தீர்களா?
இந்த விசயத்திற்கு களநிலவரம், வரலாறு ஆகியவற்றை முன்வைத்து நிறைய விளக்கங்கள் சொல்லமுடியும் என்றாலும், என்னைப் பொறுத்தவரை இதற்கு ஒரு முக்கியமான தத்துவார்த்த அடிப்படை உண்டு என்றே கருதுகிறேன்.
பெரியார், அம்பேத்கர் ஆகிய இருவரில் ஒருவரை மட்டும் பின்பற்றுபவர்களுக்கு 'சமூகநீதி' குறித்த தெளிவு முழுவதுமாக இருப்பதில்லை என்பதுமட்டுமன்றி, அத்தகையவர்கள் பார்ப்பனீயத்தோடு ஏதோ ஒரு வகையில் சமரசத்திற்கு உள்ளாகிவிடுகிறார்கள்.
மேற்சொன்ன மாநிலங்களில் சமத்துவம் பேசும் அம்பேத்கரிஸ்டுகளும் இடதுசாரிகளும் இருந்தாலும், பெரியாரியம் பற்றிய அறிமுகம் அங்கு போதிய அளவில் இல்லை என்பதுதான் எதார்த்தம். அதன் விளைவாகவே சில சமூகநீதி விசயங்களில் அவர்கள் சறுக்கிவிடுகிறார்கள்.
மாறாக இங்கோ பெரியார், அம்பேத்கர் ஆகிய இருவரையும் உள்ளடக்கிய வலுவான சமூகநீதி அடித்தளத்தை திராவிட இயக்கங்கள் அமைத்துவிட்டதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் மட்டும் பார்ப்பனீயம் எப்போதும் எடுப்படுவதேயில்லை.

மற்ற மாநிலங்களால் உள்வாங்கமுடியாத சமூகநீதி சிக்கல்களை தமிழர்கள் போகிற போக்கில் மிக எளிதாக இனங்கண்டுக்கொள்வதும், அவற்றை எதிர்த்து நின்று முறியடிப்பதும் இதனால்தான்.
சமூகநீதிப் போராட்டக்களங்களில் தமிழர்கள் 'அம்பேத்கர்-பெரியார்' ஆகிய இருவரையும் முன்னிறுத்துவதன் பயனாக, அவர்களின் தற்காப்பு-எதிர்த்தாக்குதல் (defense and offense) இரண்டுமே வலுவாக இருப்பதனாலேயே தமிழர்களிடம் ஆரியம் அம்பலப்பட்டுப்போகிறது.
இப்படி பார்ப்பனீயத்தோடு எப்போதும் சமரசம் செய்துக்கொள்ளாமல் போராடும் திராவிட இயக்கத்திடமிருந்து, இதுவரை மொன்னைகளாக இருக்கும் மற்ற மாநிலங்கள் இனியாவது கற்றுக்கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை: