வியாழன், 7 செப்டம்பர், 2017

கோவை பேருந்து நிலையே கூரை விழுந்து ஐவர் மரணம் !

தினமணி :சோமனூர் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு
முதலமைச்சர் பழனிசாமி தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகையாக அறிவித்தார். நிவாரண தொகையை ஏற்க சோமனூரில் இறந்தவர்களின் குடும்பம் மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இறந்தவர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வளாத்தில் இருந்த கடைகள் இடிந்து விழுந்தன. இந்த கோர சம்பவத்தில் பேருந்துகளுக்காக காத்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பத்துக்கும் மேற்ப்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார்,தீயணைப்புத்துறையினர் பொக்லின்,கிரேன் இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அப்புறப்படுத்தி சிக்கியவர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர்,கோவை,பல்லடம் பகுதிகளிலிருந்து பத்துக்கும் மேற்ப்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

இந்த திடீர் விபத்தில் ஐந்துபேர்வரை இறந்திருப்பதாக தெரிகிறது. இடிபாடுகளில் சிக்கிய மேலும் 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5க்கும் மேற்பட்டோரின் நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கட்டிட இடிபாடுகள் விழுந்து பலருக்கும் கை கால்கள் உடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து இக்கோரச் சம்பவத்தில் சிக்கி பலியானோர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.  படுகாயமடைந்தவர்களுக்கு தலா. ரூ.50000, சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா. ரூ. 25000 நிவாரணம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல்களை வாங்க மறுத்தும் நிவாரணத்தொகைகை ஏற்க மறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: