வெள்ளி, 9 ஜூன், 2017

வாட்சப் தவறுதலாக லீக்கான மோடியின் தூய்மை நிர்வாகக் கோவணம் !

திவாகர் தனது நண்பர் ரமேசுடன் சென்று அமைச்சரை சந்திக்கிறார். இருவருமாக அதிகாரி ஒருவரின் நியமனம் குறித்து பரிந்துரை செய்கின்றனர். அமைச்சரின் உதவியாளர், நியமன விவகாரம் இன்னொரு அமைச்சகத்திடம் இருப்பதாகவும் வேறொருவர் அந்த இடத்திற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டதாகவும் சொல்கிறார். அதற்கு திவாகர், குறிப்பிட்ட அந்த ஊரில் நியமிக்கப்பட்டவரை மட்டும் திரும்ப அழைத்தால் சந்தேகம் வருமென்றும், எனவே அந்தக் குறிப்பிட்ட பதவியில் நியமிக்கப்பட்ட எல்லோரையும் திரும்ப அழைத்துக் கொண்டு பின்னர் மீண்டும் நியமனம் நடக்கும் போது தான் சிபாரிசு செய்யும் நபரை அந்த குறிப்பிட்ட ஊருக்கு நியமிக்க வேண்டும் என சொல்கிறார்.
“சரி, சரி… இதெல்லாம் இந்தியாவில் சாதாரணமப்பா” என்று நினைக்கிறீர்கள் தானே? இதோ சம்பந்தபட்ட கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறோம்.
  • திவாகர் – டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆசிரியர்களில் ஒருவர்.
  • அமைச்சர் – அருண் ஜேய்ட்லி.
  • புரோக்கர் வேலை நடந்தது – லண்டன் தூதரகத்தில் இருக்கும் “அயல்நாட்டு வருமான வரி அலுவலர்” பதவிக்கு
  • “இன்னொரு அமைச்சகம்” – வெளிவிவகாரத் துறை
  • அமைச்சரின் உதவியாளர் – தாஸ்.
டைம்ஸ் குழுமத்துக்கோ அல்லது, தான் பகுதி நேர புரோக்கராக பணிபுரியும் கார்ப்பரேட் நிறுவனம் எதற்கோ வேண்டிய ஒருவரை வெளிநாட்டில் உள்ள வருமானவரி அலுவலர் பதவியில் அமர்த்த அருண் ஜேய்ட்லியிடம் பேரம் பேசியுள்ளார் திருவாளர் திவாகர். மேற்படி சந்திப்பையும், உரையாடல்களையும் சம்பந்தப்பட்ட நபருக்கு வாட்சப்பில் அனுப்பும் போது தவறுதலாக தனது அலுவலக ஊழியர்களின் வாட்சப் குழுவிற்கு அனுப்பியுள்ளார். அந்த வாட்சப் குழுவில் உள்ள நிருபர் யாரோ ஒருவர் தற்போது அத் தகவலை வெளியே கசியவிட்டுள்ளார்.

வெளியான வாட்ஸ் அப் தகவல்
மோடியின் “வளர்ச்சி” கோசம் ஏற்கனவே மண்ணைக் கவ்வி விட்ட நிலையில், பக்தர்களின் ஒரே நம்பிக்கையாய் இருப்பது “தூய்மையான நிர்வாகம்” என்கிற கிழிந்த கோவணம் தான். மேற்படி உரையாடலானது மோடியின் தூய்மையான நிர்வாகத்தில் இருக்கும் ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
லண்டன் நிதிமூலதன சூதாடிகளின் சொர்க்க பூமி என்பதை இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கருப்புப் பண உலகின் தலைநகரான லண்டனில் வருமான வரி ஏய்ப்புகளை கண்காணிக்கும் பொறுப்புள்ள பதவியை இப்படி புறவாசல் வழியாக கைப்பற்றுகிறவர் யாருக்கு சேவை செய்வார்?
செய்தி ஆதாரம் :

கருத்துகள் இல்லை: