வியாழன், 8 ஜூன், 2017

பிக்கு மௌரியா மெத்தபால் இயற்கை எய்தினார்.. விடுதலை சிறுத்தைகள் முன்னாள் பிரமுகர்

sanna/posts பிக்கு மௌரியா மெத்தபால் அவர்கள் இயற்கை எய்தினார்..
தமிழகத்தின் பௌத்த ஆர்வலர்களில் முக்கியமான ஆளுமைகளுள் ஒருவரான பிக்கு மௌரியா மெத்தபால் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
ரயில்வே துறையில் பணியாற்றியடி அம்பேத்கரின் கொள்கை வழி இயக்கப் பணிகளை மேற்கொண்டிருந்தார், பணி ஓய்விற்குப் பின் பௌத்த பிக்குவாக சீவரமேற்று புத்தரின் போதனைகளை பரப்பி வந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மக்கள் பண்பாடு இயக்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றும்போது எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்களின் முயற்சியினால் தமிழக சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினராக பௌத்த மதப் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டார்.

தெற்காசிய நாடுகளின் பௌத்த இயக்கங்களோடு கொண்டத் தொடர்பினால் பௌத்த இயக்கப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
தமது ஆர்வத்தினாலும், அயராத உழைப்பினாலும் தமது காலத்தின் இறுதிவரை பௌத்த பிக்குவாக இருந்து தமிழகத்தில் பௌத்தத்தை முன்னெடுத்து வந்த மெத்தபால் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்.
தமது வாழ்வில் தாம் விரும்பியபடி தம்மத்தைப் பரப்பும் பணியில் நிறைவாகப் பணியாற்றினார் என்பதை இப்போது நினைவு கூர்கிறேன். அவரோடு பணியாற்றிய நாள்களை நினைக்கும்போது மனது கனக்கிறது.
எவ்வளவோ அரசு ஊழியர்கள் இடஒதுக்கீட்டில் வேலைப் பெற்று சமூகத்தை மறந்து வாழும் காலத்தில் தமது அம்பேத்கரின் கொள்கைகளை பரப்புவதிலும், புத்தரின் கொள்கைகளைப் பரப்புவதிலும் தமது காலத்தை பயனுள்ளபடி வாழ்ந்த மௌரியா மெத்தபால் அவர்களின் பணிகளுக்கு நமது நன்றியினை செலுத்துவது நமது கடமை.
மெத்தபால் அவர்களின் பணி மற்றும் புகழ் பௌத்த வரலாற்றில் நீங்கா இடம் பெறும்.
விடை தருகிறோம் பிக்கு மௌரியா மெத்த பால் அவர்களே..
இவண்
கௌதம சன்னா

கருத்துகள் இல்லை: