திங்கள், 5 ஜூன், 2017

சசிகலா அதிமுக அணிகள் இணைவதற்கு 60 நாள் காலக்கெடு விதித்துள்ளார்!

சசிகலாவை சிறையில் சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டி.டி.வி.தினகரன் 'சசிகலா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இரு அணியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிவருவதால் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சசிகலா கருதுகிறார். அணிகள் இணைப்புக்கு இன்னும் 60 நாள்கள் கால அவகாசம் அளிப்போம் என்று சசிகலா என்னிடம் அறிவுறுத்தினார்.கட்சியிலிருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. என்னைக் கட்சியைவிட்டு ஒதுங்கச் சொல்லும் அதிகாரம் யாருக்குமில்லை. பொதுச்செயலாளர் பதவியைத் தானாக கையில் எடுத்துக் கொண்டுள்ளார் மாண்புமிகு ஜெயக்குமார். அவருக்கு என்னை ஒதுங்கச் சொல்லும் அதிகாரமில்லை. அமைச்சர்கள் அனைவரும் தங்களின் சுயபயத்தினால் என்னை ஒதுங்க சொன்னார்கள். அவர்கள் யாருக்குப் பயப்படுகிறார்கள் என்பதற்கு காலம் பதில்சொல்லும். 45 நாள்கள் கட்சியைவிட்டு ஒதுங்கி இருந்தேன். கட்சி பலப்படவில்லை. இவர்களுக்குள் இருக்கும் பிரச்னையால் கட்சிதான் பாதிக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் சசிகலா கூறியது போன்று இன்னும் 60 நாள்கள் பொறுத்திருப்போம். அதற்குப் பிறகும் கட்சி பலப்படவில்லை என்றால் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வோம்' என்று எச்சரித்துள்ளார். Special Correspondent FB Wing

கருத்துகள் இல்லை: