வெள்ளி, 9 ஜூன், 2017

அமெரிக்காவில் அரசியல் புயல்.. டிரம்பின் அதிபர் நாட்கள் எண்ணபடுகின்றன?

stanley.rajan. அமெரிக்காவில் அரசியல் புயல் வீச ஆரம்பித்துவிட்டது,
அமெரிக்கர்கள் வித்தியாசமானவர்கள், தங்கள் அதிபர் எப்படி இருந்தாலும் பொறுத்துகொள்வார்கள், ஆனால் பொய் சொல்லிவிட்டால் , நம்பக தன்மையினை இழந்துவிட்டால் விட மாட்டார்கள்
நிக்சனை அப்படி விரட்டினார்கள், மோனிகா உறவை முதலில் மறுத்து பொய் சொன்ன கிளிண்டனை விரட்டினார்கள், ஆம் கிளிண்டனின் உறவினை அவர்கள் கண்டுகொள்ளவில்லை மாறாக அவர் சொன்ன பொய் அவர்களை கொதித்தெழ செய்ததது
இப்பொழுது சிக்கியிருப்பவர் டிரம்ப், விவகாரம் என்னவென்றால் அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பதை பற்றியது
இது முன்பே கசிந்தது, ஆனால் குஜராத் கலவர வழக்கினை மோடி கையாண்டது போல மிசா கால குற்ற வழக்கினை இந்திரா கையாண்டது போல டிரம்ப் கையாண்டார்

ஆனால் டிரம்ப் இப்படி எல்லாம் அமுக்கினார் என உளவுதுறை அதிகாரியே சொல்ல அதிர்ந்து கிடக்கின்றது அமெரிக்கா
அப்படி ரஷ்யா என்ன செய்தது?
இப்பொழுதெல்லாம் ரஷ்யா கம்பியூட்டர் ஹாக்கிங்கில் புகுந்து விளையாடுகின்றது, எல்லா வித கம்பியூட்டரிலும் அவர்களால் ஊடுருவ முடிகின்றது
அதுவும் எட்வர்ட் ஸ்டோனன் எனும் அமெரிக்க நிபுணர் ரஷ்யாவில் அடைக்கலம் ஆன பின்பு ரஷ்ய அட்டம் அமோகம்
கத்தார் பிரச்சினையில் கூட கத்தார் அதிபரின் கம்பியூட்டரில் புகுந்ந்து ஏதோ செய்து அந்த அறிவிப்பினை கண்ட சவுதி கொதித்தது என்பது வரை ஏக அழிச்சாட்டியம்,
அதாவது கத்தார் மன்னர் சொன்னதாக அவர் சொல்லாமலே அவரின் அதிகார பூர்வ இணைய செய்தியில் சொல்லபட்டிருக்கின்றது, அதற்கு வாய்ப்பும் உண்டு, கத்தார் பிரச்சினை அப்படித்தான் நோக்கபடுகின்றது
இன்று நடக்கும் பெரும் ஹாக்கர்ஸ் விளையாட்டில் ரஷ்ய கரமும் உண்டு
அமெரிக்க தேர்தலில் வென்றிருக்கவேண்டியவர் ஹிலாரி, ஆனால் வருமானவரி மோசடிக்கு சிலருக்கு உடந்தையாக இருந்ததாக அவரின் இமெயில் கணக்கு திருடபட்டு எல்லோருக்கும் காட்டபட்டு ஹிலாரி புகழ் சரிந்தது
அதுதான் அப்படி செய்து டிரம்பிற்கு ரஷ்யா உதவி, அவரை அதிபராக்கியிருக்கலாம் என்ற சர்ச்சை அப்பொழுதே வந்தது
இப்பொழுது அந்த விசாரணையினினை டிரம்ப் தடுக்கின்றார் எனும் அளவிற்கு சிக்கல் செல்கின்றது, இது சாதாரணம் அல்ல, டிரம்ப் நீதியினை குழிதோண்டி புதைக்கின்றார், பொய்யராகி விட்டார் என சத்தம் வருகின்றது
அடுத்த கட்டமாக டிரம்ப் ரஷ்யாவின் கைப்பாவையாக அமெரிக்காவில் அமர்த்தபட்டார் என்ற குரல் எழும், இது டிரம்பின் பதவிக்கே ஆபத்து
ஆக டிரம்பின் அதிபர் நாட்கள் எண்ணபடுகின்றன என்பது தெரிகின்றது, மக்கள் கொதிக்கின்றார்கள், மீம்ஸ்கள் எல்லாம் பறக்கின்றன‌
இந்த செய்தி யாருக்கு சந்தோஷமோ தெரியாது, தமிழக அதிமுகவினருக்கு பெரும் சந்தோஷம் கொடுக்கும்
எப்படி?
ஆனானபட்ட டிரம்பே ரஷ்யாவின் பினாமியாம், ரஷ்யாதான் அவரை அதிபராக்கிற்றாம்,
இதில் நம் மாநில முதல்வர் பழனிச்சாமி மோடிக்கு பினாமி என்பதில் என்ன அவமானம் வந்துவிடும்? வராது, இதெல்லாம் உலக வழக்கம் என உற்சாகமாகிவிடுவார்கள்

கருத்துகள் இல்லை: