வெள்ளி, 9 ஜூன், 2017

மாட்டிறைச்சித் தடை : கேரளா தீர்மானம்!

மாட்டிறைச்சித் தடை : கேரளா தீர்மானம்!மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராகக் கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக கேரள சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று (08-06-17) நடைபெற்றது. அப்போது, மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் உத்தரவால், கேரளாவில் உள்ள 5 லட்சம் பேரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தத் தீர்மானத்தை பாரதிய ஜனதாவைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன. இதனால் பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

கேரளாவில் ஆண்டொன்றுக்கு ரூ.6,500 கோடி மதிப்பிலான 2.50 லட்சம் டன் மாட்டிறைச்சி நுகரப்படுகிறது. இந்தியாவில் மாட்டிறைச்சி நுகர்வில் முன்னணியில் உள்ள மாநிலமும் கேரளாதான். அதனால்தான் கேரளாவில் மாட்டிறைச்சித் தடைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாட்டிறைச்சித் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசித்து தேசிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்கவும் கேரளா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: