புதன், 7 ஜூன், 2017

BBC : குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும்'

இந்திய குடியரசுத்தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதியன்று நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று புதன்கிழமை அறிவித்தார். இந்திய ஜனாதிபதி மாளிகை தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி குடியரசுத் தலைவர் தேர்தல் தேதிகளை இன்று அறிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் தேர்தல் அட்டவணை பின்வருமாறு:-
ஜூன் 14 - வேட்பு மனுத்தாக்கல் செய்ய தொடக்க நாள்
ஜூன் 28 - வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்
ஜூன் 29 - வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு நாள்
ஜூலை 1 - வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்
ஜூலை 17 - குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் நாள்
ஜூலை 20 - வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்



இந்த அறிவிப்பை வெளியிட்ட நசிம் ஜைதி மேலும் கூறுகையில், ''ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடும் சூழலில், தேவைப்பட்டால் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜுலை 17-ஆம் தேதியன்று நடக்கும். இத்தேர்தலுக்காக நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ''அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்படுவர்'' என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: