tamilthehindu : அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் சூசகமாக அறிவித் திருந்த நிலையில்,
அவரை தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
விவசாயிகள் நேற்று சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவு மற்றும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல்நலக்குறைவு இவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ‘போர் வரும்போது முடிவு’ என்று அவர் கூறியது தேர்தல் வரும்போது முடிவு செய்வேன் என்றும் அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பேன் என்றும் சூசகமாக ரஜினி தெரிவித்ததாக ரசிகர்களால் கருதப்படுகிறது. இந்த சூழலில் பாஜக பின்புலத்துடன் நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி
தொடங்கப்போவதாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில், கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்த் திடீரென தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அரசியல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், ‘‘ஆண்டவன் நினைத்தால் நான் நாளையே அரசியலுக்கு வருவேன். உங்களுக்கும் தற்போது வேலை இருக்கிறது. எனக்கும் வேலை இருக்கிறது. இப்போது நாம் வேலையை பார்ப்போம். போர் வரும்போது முடிவு செய்வோம்’’ என்று கூறினார்.

தான் நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின், தனது பிறந்த
நாளான டிசம்பர் 12-ம் தேதி அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிப்பார்
என்றும் செய்திகள் வெளியாகின்றன.
ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு கட்சிகளின்
தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவதால் அரசியல் களமும்
சுறுசுறுப்படைந்துள்ளது. பாஜக தலைவர்கள், ரஜினியை தங்கள் கட்சியில்
சேரும்படி வலி யுறுத்தினர். ஆனால், அதற்கு சூசக மாக பதிலளித்த
ரஜினிகாந்த்,‘‘ நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். இதில் மேற்கொண்டு
சொல்வதற்கு ஒன்றுமில்லை’’ என்று கூறினார்.
சில நாட்களில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா,‘‘ ரஜினிகாந்தை போன்ற நல்ல மனிதர்கள் அரசிய லுக்கு வர வேண்டும்’’ என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘‘ஜெய லலிதா, கருணாநிதி
ஆகியோர் அரசியல் களத்தில் இல்லாத நிலை யில் ரஜினி அரசியலுக்கு வந்தால்
அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடும்’’ என்று தெரிவித்திருந்தார். தனியார்
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் ரஜினி அரசியலுக்கு வருவதை
திருமாவளவன் ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் தனது புதிய பட மான ‘காலா’ படப்பிடிப்பில் பங் கேற்ற ரஜினி,
சமீபத்தில் சென்னை திரும்பினார். இந்நிலையில், தென் னிந்திய நதிகள் இணைப்பு
சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலை மையில் விவசாயிகள் ரஜினியை அவரது வீட்டில்
சந்தித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.
பின்னர், இது தொடர்பாக அய்யாக்கண்ணு கூறுகையில், ‘‘ரஜினிகாந்த்தை 16
விவசாயிகள் சந்தித்தோம். அப்போது அவர், தென்னிந்திய தீபகற்ப நதிகளை
முதலில் இணைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவர் ஏற்கெனவே நதிகள் இணைப்பு
திட்டத்துக்கு ரூ.1 கோடி அளிப்பதாக தெரிவித்திருந்தார். எனவே அந்த
தொகையை விரைவில் பிரதமரிடம் அளிக்க வேண்டும் என நாங்கள் ரஜினியை கேட்டுக்
கொண்டோம். அவரும் அளிப்பதாக உறுதியளித்துள்ளார்’’ என்றார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலை யில், அவருடனான விவசாயிகளின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ரஜினியை முன்னிறுத்தும் முயற்சியா?
மும்பையில் ‘காலா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை
திரும்பியுள்ள நடிகர் ரஜினிகாந்த், நண்பர்கள், திரைத் துறையினர், சமூக
அமைப்புகள், அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் என பல்வேறு தரப் பினரை
சந்தித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ரஜினியை சந் தித்து நீண்ட
நேரம் ஆலோசித்த நடிகை கஸ்தூரி, ரஜினி அரசிய லுக்கு வருவதை உறுதி செய்யும்
வகையில் கருத்துகளை தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினியை தென் னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தின் தலைவர்
அய்யாக்கண்ணு நேற்று சந்தித்தார். ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர தீவிர
முயற்சி மேற்கொண்டுள்ள பாஜக, அவரை முன்னிறுத்துவதற்கான வேலைகளில்
இறங்கியுள்ளது. விவ சாயிகள் பிரச்சினை உள்ளிட்ட முக் கியப்
பிரச்சினைகளுக்கு ரஜினி காந்த் மூலம் தீர்வு காண மத்திய அரசு
திட்டமிட்டுள்ளதாகவும், அதற் காகவே அய்யாக்கண்ணு போன் றவர்களுடனான
சந்திப்புகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக