வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

தேமுதிக விருப்புமனு கொடுப்பவர்களின் ஒட்டு மொத்த விருப்பமும் திமுக கூட்டணிதான்...அதிர்ச்சி?

தி.மு.க. நேர்காணலைத் தொடங்கிய அதே நாளில் விஜயகாந்த்தும் தனது கட்சியின் நேர் காணலை நடத்தினார். முதல்நாளில் கன்னியாகுமரி, நெல்லை, திருவள்ளூர், நீலகிரி என 4 மாவட்ட விருப்ப மனு விண்ணப்பதாரர்களை அழைத்துப் பேசினார் விஜயகாந்த். இந்த நேர்காணலில் சுதீஷ், பார்த்தசாரதி, சந்திரக்குமார் உள்ளிட்ட மாநில நிர் வாகிகள் விஜயகாந்த்திற்கு உதவினர். தே.மு.தி.க. நேர் காணல் குறித்து அதில் கலந்துகொண்டு திரும்பிய வர்களிடம் நாம் பேசியபோது, ""ஒவ்வொரு தொகு திக்கும் சராசரியாக 50-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு கொடுத்திருப்பதால் ஒட்டுமொத்தமாக உட்காரவைத்துத்தான் கேள்விகளை கேட்டார். என்னவொண்ணு, ஒவ்வொருத்தரா போய் அவருக்கு முன்னால போட்டிருக்கும் நாற்காலியில உட்கார்ந்து பதில் சொல்லணும்.   இது  ஒரு  கட்சி இதுக்கெல்லாம் வாக்கு வங்கி வேற...மெண்டல் மென்டாலிட்டி எல்லாம் அரசியல்....வெளங்குமா? .

அப்போது, மன்றத்து ஆளாக இருந்தால் அவர்களை தனியாகப் பிரித்து அவர்களிடம் மட்டும் தனியாக இண்டர்வியூ பண்ணுகிறார் விஜயகாந்த். என்ன சாதி? என்ன படிச்சிருக்கீங்க? உங்க தொகுதியில் யார் மெஜாரிட்டி சாதி? எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்று கேட்கிறார். இதற்கு பெரும்பாலும் சாதி தொடர்பான கேள்விகளுக்கு எல்லோரும் சரியாகவே பதில் சொன்னார்கள்.

 செலவு விவகார கேள்விகளுக்கு மட்டும், பல பேர், "எனக்கு வசதி கிடையாது. ஆனா, கட்சிப் பணி செய்து தொகுதி யில நல்லப்பேரு வாங்கியிருக்கேன். என் சக்திக்கு 20 லட்சம்தான் செலவு செய்ய முடியும். எனக்கு சீட் கிடைச்சா நிச்சயம் ஜெயிச்சிருவேன்' என நம்பிக்கையான வார்த்தைகளை சொன்னார்கள். சிலர் மட்டும் "நான் ஒண்ணரை கோடி வரை செலவு செய்யமுடியும்'னு சொன்னாங்க.
 "நாம் கூட்டணி வைக்கணுமா? தனிச்சி போட்டியிடணுமா? எது கட்சிக்கு நல்லது?'ன்னு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, "கூட்டணிதான் வேணும். அதுவும் தி.மு.க.வுடன் கூட்டணிங்கிறது தான் சரியா இருக்கும்' என கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் சொன்னார்கள்.
"தி.மு.க.வையும்தான் நாம் விமர்சிச்சிருக்கோம். அவங்களோட கூட்டணி வெச்சா எப்படி சரியா இருக்கும்? ஏன், பி.ஜே.பி.க் கூட கூட்டணி வைக்கக்கூடாது?' என்று விஜயகாந்த் கேட்டிருக்கிறார். அதற்கு, "தனியா போட்டி யிட்டப்போ நெல்லை பார்லிமெண்டில் 1,40,000 ஓட்டு வாங்குனோம். அதுவே போன முறை பி.ஜே.பி. கூட்டணியில நின்னப்போ 1,20,000 தான் வாங்க முடிஞ்சது. அதனால பி.ஜே.பி.யோட சேர்றதினால நமக்கு லாபம் இல்லே. அவங் களுக்குத்தான் லாபம். அதுவே தி.மு.க.வோட இருந்தோம்னா அவங்க ஓட்டு நம்மை ஜெயிக்க வைக்கும்; நம்ம ஓட்டு அவங்கள ஜெயிக்க வைக்கும்'னு அழுத்தமா சொன்னோம்.
 அப்போ, திடீர்னு "மக்கள் நலக்கூட்டணி யோடு நாம் சேர்ந்தா என்ன?'ன்னு கேப்டன் கேட்டார். அதுக்கு, "ஜெயிக்கவும் முடியாது; ஓட் டும் வாங்க முடியாது. ஜெயலலிதாவைத் துரத்த ணும்னா தி.மு.க. கூட்டணிதான் சரியா இருக்கும்' என எல்லோருமே தெளிவாக சொன்னோம்.
 மன்றத்து ஆட்களும் தி.மு.க. கூட்டணிங்கிறதைத் தான் வலியுறுத்துனாங்க. இப்படி வலியுறுத்துன சிலரிடம், "தி.மு.க. வெறும் 50 சீட் தான் தரு வோம்னு சொல்றாங்க. ஏத்துக்கலாமா?' என்று கேட்க, "இல்லைங்க கேப்டன். 70, 75 சீட் வாங்க ணும்'னு சொன்னார்கள். விஜயகாந்த் இப்படி எங்களிடம் கேட்டதை வெச்சு பார்க்கிறப்போ தி.மு.க.வும் கேப்டனும் பரஸ்பரம் பேசியிருக் காங்கன்னு தோணுது'' என்று விவரித்தனர்.
 கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் சுலபமா ஜெயிக்கலாம் என தி.மு.க.வில் நேர்காணலுக்கு வந்தவர்களிடம் எதிரொலிக்கும் அதே உற்சாகத்தை தே.மு.தி.க.வில் இருப்பதைப் பார்க்க முடிந்தது. கேப்டன் கணக்கு என்னவோ! -இரா.இளையசெல்வன் படம்: எஸ்.பி.சுந்தர்  nakkheeran,in


கருத்துகள் இல்லை: