திங்கள், 22 பிப்ரவரி, 2016

பிரேமலதா பேச்சு...பேட்டை ரவுடிகளே வெட்கப்படுகிறார்கள்...

தேமுதிக சார்பில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் வேடலில் நடைபெற்ற 'திருப்புமுனை மாநாடு' எதை திருப்பியதோ இல்லையோ பல்வேறு சர்ச்சைகளுக்கு தூபம் போட்டுள்ளது. சட்டசபை தேர்தல் கூட்டணியை அறிவிக்கப்போகிறார் விஜயகாந்த் என்று, உருவாக்கப்பட்ட, எதிர்பார்ப்போடு, வேடலில் பல ஆயிரம் தொண்டர்கள் மத்தியில் கூடியது திருப்பு முனை மாநாடு. கட்சி தலைவர் விஜயகாந்த் கூட்டம் தொடங்கியபோது வரவில்லை என்றாலும், அவர் இடத்தில் நின்று மாநாட்டை நகர்த்திக்கொண்டிருந்தது பிரேமலதா விஜயகாந்த்தான்.
தெறிக்கவிட்ட பிரேமலதா மாநாட்டில் விஜயகாந்த் பேச்சைவிட, பிரேமலதா பேச்சுதான் ரொம்ப ஷார்ப்பாகவும், தொண்டர்களை தட்டி எழுப்புவதாகவும் இருந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்களை மொத்தமாக பார்த்த உணர்ச்சி மிகுதியிலோ என்னவோ, பிரேமலதா வரம்பு மீறி வார்த்தைகளை தெறிக்கவிட்டார் ஜெயலலிதாவை தாக்குவதாக எண்ணிக்கொண்டுகொஞ்சம் கூட நாகரீகம் இன்றி மோசமான வார்த்தைகளை வாந்தி எடுத்துள்ளார்

மாநாட்டில் தலைவரான விஜயகாந்த்தைவிட வெகுநேரம் பேசியது அண்ணியார் என அக்கட்சியினர் பாசமாக அழைக்கும் பிரேமலதாதான். அதில் பெரும்பாலும், முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக விமர்சனம் செய்வதாகவே இருந்தது
ஆட்சியை விமர்சனம் செய்வதோடு நிறுத்தியிருந்தால், பிரச்சினையில்லை. பிரேமலதா பேசும்போது, ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கை குறித்தும், மோசமாக அர்ச்சனை செய்தார்
அம்மா.. அம்மா அமைச்சர்கள், அடிமைகளை போல நடத்தப்படுவதாக விமர்சனம் செய்து ஆக்ரோஷமாக பேசினார் பிரேமலதா. அம்மா.. அம்மா.. என அமைச்சர்கள் குனிந்து, கும்பிடு போட்டு வாழ்க்கை நடத்துவதாக கேலி செய்தார் பிரேமலதா.
பெண்களை, ஆண்களுக்கு அடிமை போல நடக்க வேண்டும் என்று பிரேமலதா விரும்புகிறார், குழந்தையில்லாத பெண்களை இழிவு செய்துவிட்டார், இவரது கட்சிக்கா ஆட்சி? என்ற வாக்கியங்களுடன் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பி வருகிறதாம் உளவுத்துறை.
பிரேமலதாவுக்கு பின்னடைவு ஜெயலலிதா தரப்பில் இருந்து வரும் மறைமுக பதிலடியால் கலங்கிப்போயுள்ளது தேமுதிக வட்டாரம். நேரடியாக போராட்டம் நடத்துவார்கள், விளம்பரம் கிடைக்கும் என்று நினைத்திருந்த பிரேமலதாவுக்கு இது பின்னடைவாக போயுள்ளது.
ஊருக்குத்தான் உபதேசம் அதிமுகவினர் ஜெயலலிதா காலில் விழுவதை பிரேமலதா கிண்டலடிந்து ஒரு சில நிமிடங்களில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில், விழா மேடையில், விஜயகாந்த் காலில், கட்சி நிர்வாகி அனகாபுத்துர் முருகேசன் விழுந்து கும்பிட்டார். அவரை காலில் விழவிடாமல் விஜயகாந்த் தடுக்கவும் இல்லை, விழுந்ததும் எந்திரியுங்கள் என கூறவும் இல்லை. இதைப் பார்த்த பிரேமலதா முகத்தில் அப்போது ஈ ஆடவில்லை.

Read more a://tamil.oneindia.co

கருத்துகள் இல்லை: