கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் நேற்றிரவு(ஞாயிறு) தன்னுடைய தந்தை டி.ராஜேந்தருடன் ஆஜராகியிருக்கிறார் சிம்பு.
"பீப்" பாடலுக்குப் பின் டிசம்பர் மாதம் முதல் தலை மறைவு வாழ்வில் இருந்த நடிகர் சிம்பு இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். சிம்புமீது கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் மற்றும் சென்னையில் அடுத்தடுத்த புகார்கள் மாதர் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர்- நிறுவனர் ஆவின் எஸ்.ஏ.பொன்னுச்சாமியும் ஒரு புகாரைக் கொடுத்திருந்தார். இதுதவிர, பெண்கள் அமைப்பினர் இடைவிடாத போராட்டங்களையும் நடத்தினர். போலீசாரும் சிம்புவைத் தேடிவருவதாக தெரிவித்தனர். கண்றாவி பீப் பாடல் செய்தியெல்லாம் படிக்க வேண்டி இருக்கிறதே...அதாய்ன் நல்ல ஒரு பழைய அழகிய தமிழ் பாட்டு
ஆனால், இந்த மூன்று மாத காலமும், "சிம்பு எங்கேயும் ஓடிப் போய் விடவில்லை... அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை" என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஒரு பக்கம் பேட்டியும் கொடுத்துக் கொண்டிருந்தார்.காஞ்சிபுரம் வழக்ககறுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வேண்டுதலும் செய்தார்.
இந்த சூழ்நிலையில்தான் சிம்பு போலீசில் நேற்றிரவு ஆஜராகியிருக்கிறார். நாளை மறுநாள் (24-ந்தேதி) சிம்பு குறித்த வழக்கு விசாரணை கோர்ட்டில் வருகிற நிலையில் இந்த ஆஜர் படலம் நடந்திருக்கிறது. சிம்புவை கோர்ட்டுக்கு வரவழைத்திருக்கும் ஆவின் பொன்னுச்சாமியிடம் பேசியதிலிருந்து....
" டாஸ்மாக்கை மூடச்சொல்லி பாடகர் கோவன் ஒரு பாடலைப் பாடியதற்கே அவரை தூக்கிவந்து இருக்கிற செக்ஷன்களையெல்லாம் போட்டு போலீசாரும், இந்த அரசும் படுத்திய பாட்டை நாடறியும். மூன்றரை கோடி பெண்கள் உள்ள தமிழ்நாட்டில் இப்படி ஒரு பாடலை பாடியவரை போலீசார், மூன்று மாதமாக நெருங்கவே முடியாமல் கண்ணாமூச்சு விளையாடியதை என்னவென்று சொல்வது ?
’இன்னும் இதுபோல் 150 பாடல்களை நான் கையில் வைத்திருக்கிறேன்’ என்று சிம்பு சொல்லியிருக்கிறார்... வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி ஒரு பாடலை வெளியிட்டு விட்டு அதோடு நிறுத்தாமல் கைவசம் அதேபோல் பாடல்கள் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? இந்த துணிச்சலை சிம்புவுக்கு கொடுத்தது யார்?
ஏதோ சொத்துக் குவிப்பு வழக்கு போல ஆஜராகாமல் இத்தனை இழுத்தடிப்பு செய்தும் கூட இன்னும் ஆணவம் குறையாமல், மன்னிப்பு கேட்கும் பண்பு இல்லாமல், நான் தவறு செய்திருந்தால் அதை இறைவன் பார்த்துக் கொள்வான் என்று சொல்லித் திரிகிற சிம்புவை ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்று ஆயிரம் அவலங்கள் நாட்டில் உருவாகி எந்த தண்டனையும் பெறாமல் மறைந்துவிடும்.
சிம்புவின் "பீப்" பாடலை ஏதோ ஹிட் சாங் போல என்று நினைத்து இது குறித்த எதுவும் அறியாத நிலையில் நான், என் மனைவி, என் மகள் மூவருமே கேட்டு விட்டோம். அப்போது எங்கள் உள்ளம் வேதனையால் துடித்தது போன்று யாரும் இனி துடிக்கக் கூடாது என்ற நிலையில்தான் வழக்குத் தொடர்ந்தேன்.
சிம்புவின் கேவலமான பாடல் விவகாரத்தின் மீதான புகாரில் என் மனைவி, மகள் இருவரையுமே ஐ- விட்னஸாக போட்டிருக்கிறேன். மற்றவர்கள் நடத்திய போராட்டம், ஆர்ப்பாட்டம் எப்படிப் போகுமோ தெரியாது, நான் கொடுத்துள்ள புகாருக்கும், போட்டுள்ள வழக்கிற்கும் சிம்பு பதில் சொல்லியே ஆக வேண்டும் " என்கிறார் ஆவின் பொன்னுச்சாமி.
ஒரு ‘பீப்’புக்கே தமிழ்நாடு தாங்கலை... இதுல இன்னும் 150-ஆ...!?
- ந.பா.சேதுராமன் vikatan,com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக