சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார பொறுப்பை உலகின் புகழ்பெற்ற ‘ஜே
வால்டர் தாம் சன்’ விளம்பர நிறுவனத்திடம் திமுக ஒப்படைத்துள்ளதாகக்
கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் நடை பெறவுள்ளது. இதற்காக கடந்த
ஓராண்டாகவே திமுக தயாராகி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் முன்னோட்டமாக
கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி முதல் ‘நமக்கு நாமே விடியல் மீட்புப்
பயணம்’ என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின்
சுற்றுப் பயணம் செய்தார். வழக்க மான பிரச்சாரப் பயணம் போல அல்லாமல்,
கட்சிக்கு அப்பாற் பட்டு ஒவ்வொரு பிரிவினரையும் தனித்தனியாக சந்தித்து இயல்
பாக கலந்துரையாடினார் ஸ்டாலின். அதுபோல முகநூல், ட்விட்டர், வாட்ஸ்-அப்,
வைபர் போன்ற சமூக ஊடகங்களிலும் திமுகவுக்கான பிரச்சாரம் தீவிர மாக நடந்து
வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் ஒவ்வொரு அசை
வும் இணையதளம், சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
ஸ்டாலினின் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் இணையதளம், வைபர், யூ-டியூப்
மூலம் நேரடியாக ஒளிபரப் பப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக ‘முடி யட்டும் விடியட்டும்’ என்ற தலைப் பில்
ஊடகங்களிலும், சமூக ஊட கங்களிலும் திமுக தீவிர பிரச் சாரம் செய்து
வருகிறது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் இதுபோன்ற பிரச்சார யுக்திகளை தீர்மானிப்பது உல கின் பிரபல ஜே
வால்டர் தாம்சன் விளம்பர நிறுவனம் எனக் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத்
தேர்தலுக்கான பிரச்சார பொறுப்பை இந்த நிறுவனத்திடம் திமுக ஒப்படைத்துள்ளதாக
செய் திகள் வெளியாகியுள்ளது.
உலகின் 4-வது பெரிய விளம்பர நிறுவனமான ஜே வால்டர் தாம்சன் நிறுவனம் 1864-ல் தொடங்கப் பட்டது. 90 நாடுகளில் 200 அலுவல கங்களைக் கொண்டுள்ள இந்நிறு வனத்தில் 10 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். ://tamil.thehindu.com/t
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக