தற்சமயம்
கோலிவுட்டின் பெரிய தலைகள் பலரும் ஏதோ ஒரு ஃப்ளைட்டைப் பிடித்து ஃபாரின்
செல்கின்றனர். இடையில் ஊருக்குள் வந்த பன்ச் நடிகரும் கூட டப்பிங்கை
முடித்துக்கொண்டு விடு ஜூட் என பறந்து விட்டார். என்ன காரணம் என்றால்
எல்லாம் எலெக்ஷன் சீசன் தான் காரணம் என்கிறார்கள். அப்போ அரசியலுக்கு
வரமாட்டீங்க!என்னப்பா இது படம் வந்து பல வாரம் ஆச்சு தயாரிப்பு நடிகரோட பட புரமோஷன் மட்டும் இன்னும் நிறுத்தின மாதிரி இல்லியே எனக் கேட்டால். காசா பணமா சும்மா விளம்பரம் தானே. அவங்க சேனல், அதில் என்னவேணா பண்ணிக்குவாங்க. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் டிவியில் ஓட்டுவாங்க, ஆனால் தியேட்டரில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நடக்குமா என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்போ அடுத்த படம் ரிலீஸ் வரைக்குமா ஜி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக