மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, 24.02.2016 புதன் கிழமை அன்று பாராளுமன்றத்தில் பேசிய சொர்ணாக்கா டைப் உதாரை அரை டவுசர் அம்பிகள் உலக அதிசயமாக உருகி பருகி கழித்து வருகிறார்கள். பேசுவதில் ஜெர்மனியின் ஹிட்லரைப் போன்ற சாமர்த்தியம் இந்திய ஹிட்லர்களுக்கோ இல்லை ஹிட்லரிகளுக்கோ இருக்காதா என்ன?
சொர்ணாக்கா உரையில் நாடகம், அழுகை, ஆத்திரம், சத்தம், எல்லாம் இருந்ததாக மோடி ஜால்ரா ஊடகங்கள் தொகுத்திருக்கின்றன. ரோஹித் வெமுலா தற்கொலைக்கு அவரே காரணமென்றும், ஜே.என்.யூவில் தேச விரோதிகள் நிறைந்திருப்பதாகவும் பேசினார் ஹிட்லரி ஸ்மிருதி ராணி. அந்த தேச துரோகங்களில் முக்கியமானது என்ன? பல்கலை வளாகத்தில் மகிஷாசுரனை வணங்கியதோடு, துர்ஹாவை விபச்சாரி என்று திட்டினார்களாம் மாணவர்கள். இதையெல்லாம் கருத்துரிமை என்று அங்கீகரிக்க முடியுமா என சீறுகிறார் வடக்கத்தி சொர்ணாக்கா!
சரி இப்படி மாணவர்கள் பேசினார்களா, பேசவில்லையா போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போகாமல் நாம் அம்பேத்கரை அழைப்போம். அவரது சிலைக்கு பூமாலை போட்டு நடிக்கும் பார்ப்பனிய இந்துமதவெறியர்களுக்கு அவர் அளிக்கும் பதிலை பாருங்கள்!
சரி, இது தெரிந்தால் ஸ்மிருதி ராணி என்ன செய்வார்? அம்பேத்கர் ஒரு தேசத்துரோகி என்று தீர்ப்பளிப்பாரா? அம்பேத்கர் நூல்களை தடை செய்வாரா? “ஆரியர்கள், பலரும் காணும் வகையிலும், வெட்ட வெளிகளிலும் பெண்களோடு கூடுவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். வாமதேவ்ய விரதம் என்னும் ஒரு சமயச் சடங்கினை யாக பூமியில் ரிஷிகள் நடத்தும்போது அந்த வழியாகப் போகும் பெண்ணொருத்தி தன் விருப்பத்தைத் தெரிவித்தால் அவளது விருப்பத்தை நிறைவேற்ற அந்த யாக பூமியிலேயே ரிஷிகள் அவளோடு கூடுவர். இத்தகைய நிகழ்ச்சிகள் பலவற்றைக் கூறலாம்.
பராசர முனிவர் சத்தியவதியோடும், திர்கதாபையுடனும் இத்தகைய உறவு கொண்டவர். அயோனி என்ற சொல்வழக்கின் மூலம் இத்தகைய பழக்கம் நிலவியதை அறியலாம். அயோனி என்னும் சொல்லுக்குக் களங்கமற்று, தூய்மையாகக் கருவுறுதல் என்று பொருள்.
ஆயின் அந்தச் சொல்லுக்கு ஆரம்ப காலத்தில் நிலவிய பொருள் வேறானது. யோனி என்னும் சொல்லின் மூல அர்த்தம் வீடு என்பது. அயோனி என்பது வீட்டுக்கு வெளியே அதாவது வெட்ட வெளியில் கருவுறுவதைக் குறிக்கிறது. சீதையும் துரோபதையும் இப்படிப்பட்ட அயோனிஜிகளேயாதலால், இந்தப் பழக்கத்தில் தவறேதும் இருப்பதாகக் கொள்ளவில்லை என்றாகிறது. இத்தகைய வழக்கத்தை எதிர்த்துக் சாஸ்திர நூல்களில் தடை விதித்திருப்பதால் இந்த வழக்கம் பரவலாக இருந்ததை அறியலாம்.
தம் மனைவியரைச் சிறிது காலத்திற்கு அயலாருக்கு வாடகைக்கு விடும் வழக்கமும் ஆரியரிடையே இருந்து வந்தது. மாதவியின் கதையை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். யயாதி மன்னன் தன்மகள் மாதவியைக் குரு காலவருக்குத் தானமாக அளித்தான். காலவமுனிவரோ மாதவியைக் குறிப்பிட்ட காலங்களுக்கு மூன்று மன்னர்களுக்கு அளித்தார். பின்னர் அவளை விசுவாமித்திரருக்கு மணமுடித்து வைத்தார். ஒரு மகனைப் பெற்றெடுக்கும் வரை மாதவி அவருடன் இருந்தாள். பின்னர் காலவ முனிவர் அவளை அழைத்துச் சென்று மீண்டும் அவளுடைய தந்தை யயாதிக்கே அளித்தார்.
இவ்வாறு மகளிரை மாற்றாருக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு அளிக்கும் வழக்கத்தைப் போலவே சிறந்த ஆடவர் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும் பழக்கமும் ஆரியரிடையே இருந்தது. குடும்பம் என்பது அவர்களிடையே பிள்ளைகளைப் பெருக்குவது என்றே இருந்தது. ஆரியர்களிடையே வலிமையிலும் அந்தஸ்திலும் உயர்ந்தவர்களாக விளங்கிய பிரிவினர் தேவர்கள் எனப்பட்டனர்.சிறந்தபிள்ளைகள் பிறக்க வேண்டுமென்பதற்காக இந்தத் தேவர்களோடு கூடுவதற்குத்தம் மகளிரை ஆரியர் அனுமதித்தனர்.
ஆரியப்பெண்களை இவ்வாறு முதலில் சுகிப்பது தங்களுடைய உரிமை எனத் தேவர்கள் கருதிய வழக்கம் பரவலாக இருந்தது.இத்தகைய வகையில்தேவர்கள் ஒரு பெண்ணைச் சுகித்த பின், அவதானம் என்னும் விலையை அளித்து அவர்களிடமிருந்து மீட்ட பின்பே ஆரிய மகளிர் திருமணம் செய்துகொள்ள முடியும். முதலில் தேவர்கள் சுகித்த பெண்ணை மீட்பது பற்றி அஸ்வல்யான் கிரஹ்ய சூத்திரத்தில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. இந்து திருமணங்களில் நடத்தும் லஜஹோமமும் இந்த வழக்கத்தின் எச்சத்தையே நினைவுட்டுகின்றது. அவதான் கொடையும், லஜ ஹோமம் வளர்த்தலும் இவ்வாறு திருமணப் பெண்ணைத் தேவர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு அளிக்கப்படும் விலையேயன்றி வேறல்ல.
இந்து திருமணங்களில் இடம் பெற்றுள்ள சப்தபதி சடங்கும், அந்தச் சடங்கினைச் செய்யாமல் நிகழ்த்தப்படும் திருமணம் சட்டப்படியானதாகாது என்னும் அளவுக்கு அவசியமான சடங்காகக் கொள்வதும் தேவர்கள் மகளிரைத் திருமணத்திற்கு முன் சுகிக்கும் உரிமையோடு தொடர்புடையது. சப்தபதி என்பது மணமகள் மணமகனுடன் ஏழு அடியெடுத்து வைத்து நடத்தல் என்னும் சடங்காகும். இதற்கு அவசியமென்ன? தேவர்கள் அந்தப் பெண்ணை விடுவிப்பதற்குத் தமக்கு அளிக்கப்படும் நஷ்ட ஈடு போதுமானதல்ல என்று கருதினால், அந்தப் பெண் ஏழாவது அடியெடுத்து வைப்பதற்குள் தன் உரிமையை நிலை நாட்டிக் கொள்ளலாம் என்பதையே இது குறிக்கிறது. மணப் பெண் ஏழாவது அடியெடுத்து வைத்த பின்பு அவள் விடுதலை பெறுகின்றாள். அதன் பின்பே மணமகன் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ள முடியும்; தேவர்களின் தொல்லையோ, தடைகளோ இல்லாமல் அவர்கள் கணவன், மனைவியராக வாழமுடியும்.
பெண்களின் கற்பு சம்பந்தமான’ விதிகளேதும் அச்சமயம் இருக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு பெண் எவருடனாவது கூடிப் பிள்ளைகளும் பெற்றுக் கொள்ளலாம். கன்யா என்னும் சொல்லின் வேர்ச்சொல்லுக்குக்குரிய பொருளே இதற்குச் சான்றாகிறது. கன்யா என்னும் சொல்லின் வேர்ச் சொல்லான கம் என்பது ஒரு பெண் தன்னை எந்த ஆடவனுக்கும் உரியவளாக்கும் சுதந்திரமுடையவள் என்னும் பொருளுடையது. எனவே பெண்கள் முறையான திருமணத்திற்கு முன்பு எந்த ஆடவனுடனும் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டனர் என்பதற்குக் குந்தியும், மச்சியகந்தியும் சான்றாக உள்ளனர். பாண்டுவைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் குந்தி பலருடன் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டாள். மச்சியகந்தி பீஷ்மரின் தந்தையான சந்தனுவை மணப்பதற்குமுன் பராசரனுடன் கலவி செய்தவள்.” வினவு.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக