The Maharashtra state government has allotted more than 600 acres of land to the Patanajli Yogpeeth, run by yoga guru Baba Ramdev
நாக்பூர்:பாபா ராம்தேவின், பதஞ்சலி யோகா பீட நிறுவனம், ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பதற்காக, மஹாராஷ்டிர மாநில அரசு, குறைந்த விலையில், 600 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசு ராம்தேவுக்கு சொந்தமான, பதஞ்சலி நிறுவனத்திற்கு, நாக்பூர் அருகே, கதோல் பகுதியில், 200 ஏக்கர் நிலத்தையும், மிஹான் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 450 ஏக்கர் நிலத்தையும் குறைந்த விலையில் ஒதுக்கியுள்ளது. இங்கு, ஆயுர்வேத பொருட்களை தயாரிக்கப் போவதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இதே போன்று நடிகை ஹேமமாலினிக்கும் மும்பையில் மிகவும் பெறுமதி வாய்ந்த இடத்தில அடிமாட்டு விலைக்கு சிவசேனா பாஜக அரசு வழங்கியது ஆனால் மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது
விதர்பா பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும், வனப் பகுதிகளில், நெல்லிக்காய், கற்றாழை மற்றும் மூலிகை பொருட்கள் ஏராளமாக கிடைக்கின்றன; அங்கு, 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய, பதஞ்சலி திட்டமிட்டுள்ளது.
பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியை மேம்படுத்தவே, நிலம் வழங்கியதாக, மாநில அரசு கூறுகிறது. ஆனால், 'டெண்டர் கோராமல், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக, மாநில அரசு செயல்படுகிறது' என, எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ், கண்டனம் தெரிவித்துள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக