மதுரை மத்திய சிறைக்குள் நடந்த 2 கைதிகள் மோதலில் சுவரில் தலையை மோத வைத்து ஒரு கைதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கொலைக்கைதிகள்
மதுரை கீரைத்துறை, வாழைத்தோப்பு, முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர்
முனியசாமி. இவருடைய மகன் செந்தில்(33). இவர் கடந்த ஆண்டு மே மாதம் அந்த
பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளி நிறைகுளத்தான்(70) என்பவரை கத்தரிக்கோலால்
குத்திக்கொலை செய்தார்.
இது தொடர்பாக கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தி செந்திலை கைது செய்து
மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் அடைக்கப்பட்டு இருந்த அறையில்
செந்தில்குமார் என்பவரும் இருந்தார். இவர், தந்தையை கொலை செய்ததாக
கள்ளிக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.நாட்டில் வன்முறை தலைதூக்கி ஆடுவதற்கு சாராயமா சினிமாவா அதிக காரணம்? வறுமைக்கு சாராயமும் வன்முறைக்கு சினிமாவும்தான் காரணம்..
இவர்கள் இருவருக்கும் சிறிது மனநிலை பாதிப்பு இருந்ததால், சிறையில் பி-12 என்ற தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
மோதல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு கைதிகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதிக்கொண்டனர். அப்போது செந்தில்குமார் ஆத்திரம் அடைந்து செந்திலின் தலையை சுவரில் பலமாக முட்டினார். இதனால் செந்தில் பலத்த காயம் அடைந்து மயங்கினார். சத்தம் கேட்டு சிறைக்காவலர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்த செந்திலை சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே செந்தில் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, கூடுதல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
நீதிபதி விசாரணை
சிறைக்குள்ளேயே நடந்த இந்த கொலை குறித்து நீதிபதி விஷ்ணுமது நேற்று தனது விசாரணையை தொடங்கினார். அவர் சிறை அதிகாரிகள், சிறைக்காவலர், செந்திலின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
கைதி செந்திலுக்கு திருக்கம்மாள் என்ற மனைவியும், முகிலா, முகேஷ் ஆகிய குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் நின்று அழுதது பரிதாபமாக இருந்தது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக