வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

தி.மு.கவில் சீட் கேட்டு 7 ஆயிரத்திற்கும் அதிக மானோர் விருப்பமனு

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதில் வேகம் காட்டத்துவங்கியிருக்கிறது
தி.மு.க.! இந்த முறை சீட் கேட்டு 7 ஆயிரத்திற்கும் அதிக மானோர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களிலிருந்து வேட்பாளர்களை தேர்வு செய் வதற்காக அவர்களிடம் நேர்காணலை நடத்திக் கொண்டிருக்கிறார் கலைஞர்.
காலை 6 மணியி லிருந்தே பரபரப்பாகி விடுகிறது அறிவாலயம். நேர்காணலின் முதல்நாள் (22-ந்தேதி) கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாத புரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட தொகுதிகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. அந்த மாவட்டங்களின் உடன் பிறப்புகளும் அவரது ஆதரவாளர்களும் அறிவா லயத்தில் குவிய, ஒழுங்குப்படுத்தும் பணி பூச்சிமுருகன், சதாசிவம், துறைமுகம் காஜா உள்ளிட்டவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது.


 10 மணிக்கு துவங்கும் நேர்காணலுக்கு 9.30-க்கே அறிவாலயம் வந்துவிட்ட கலைஞரைக் கண்டு தி.மு.க.வினர் உற்சாகமாயினர். மிகச்சரியாக 10 மணிக்கு தி.மு.க.வின் நேர்காணல் துவங்கியது. கலைஞர், பேராசிரியர், ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேர்காணல் நடத்தினர். காலை 10 மணி முதல் மதியம் 1.30 வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் என ஒரு நாளைக்கு சுமார் ஏழரை மணிநேரம் நடக்கிறது நேர்காணல். நேர்காணலில் நடப்பது குறித்து நாம் விசாரித்தபோது, ""சராசரியாக ஒரு நாளைக்கு 5 மாவட்டங்களை முடித்து விட வேண்டுமென்று தான் திட்டமிடப்பட்டது. ஆனால் முதல் நாள் கன்னியாகுமரியும் நெல்லையும் மட்டும்தான் முடிக்க முடிந்தது. காரணம், ஒவ்வொரு தொகுதியிலும் சீட் கேட்டவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் நேர்காணல் நடத்தாமல் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து கேள்விகள் கேட்கப்பட்டதாலும் பொதுவான கேள்விகள் தவிர பல துணைக் கேள்விகளும் கேட்கப்பட்டதாலும் நேரம் போதவில்லை'' என்று சுட்டிக்காட்டுகிறது அறிவாலய வட்டாரம்.

நேர்காணலில் அழுத்தமாக வைக்கப்பட்ட கேள்விகள் குறித்து விசாரித்தபோது, ""கட்சியில் எவ்வளவு காலமாக இருக்கிறீர்கள்? தற்போது என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்? இந்த தொகுதியில் சாதி ரீதியாக யார் வலிமையாக இருக் கிறார்கள்? சாதி ரீதியிலான ஓட்டுகள் எந்தெந்த கட்சிகளுக்கு அதிகமாக இருக்கிறது? நீங்கள் என்ன சமூகம்? தி.மு.க.தான் ஜெயிக் கும் என்று எதை வைத்து சொல்றீங்க? என்ன பிஸ்னெஸ் பண்றீங்க? எவ்வளவு செலவு செய்ய முடியும்? உடனே கட்டச்சொன்னா எவ்வளவு பணத்தைக் கட்டுவீங்க? நீங்கள் கேட்கும் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிவிட்டால் உங்க மனநிலை என்ன? போன்ற அடிப்படைக் கேள்விகள் எல்லோரிடமும் கேட்கப்பட்டன. பெரும்பான்மையானோர் அதிகபட்சமாக 5 கோடி வரை செலவு செய்ய முடியுமென்றும், தலை மை உத்தரவிட்டால் ஒரு வாரத்தில் ஒரு கோடி ரூபாய் கட்ட முடியுமென்றும் சொல்லியிருக்கிறார் கள். மந்திரிகளாக இருந்தவர்களும் மா.செ.க்களாக இருப்பவர்களும் மட்டும் 10 கோடி வரை செலவு செய்ய முடியும் என தெரிவித்திருக்கிறார்கள். இந்த பதிலைக் கேட்டு சிலரை உற்றுப் பார்த்தார் கலைஞர்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் 2 தொகுதிகளுக்கு பணம் கட்டியிருக்கிறார் மா.செ. சுரேஷ்ராஜன். இவரை எதிர்த்து கன்னியாகுமரிக்கு பணம் கட்டியிருக்கும் 32 வயது இளைஞர் செந்தில்குமார், மா.செ. தேர்தலில் சுரேஷ் ராஜனை எதிர்த்துப் போட்டிப்போட்டவர். இவரது பயோடேட்டாவை ஆராய்ந்துகொண்டிருந்த கலைஞர், "அதென்ன பி.இ.பி.எல்.லுன்னு படிச் சிருக்க?' என கேட்க, "இன்ஜினியரிங் முடிச்சிட்டு சட்டம் படிச்சிருக்கார்' என்று ஸ்டாலின் விவரிக்க, "இவர் சட்டப்பொறியாளரா?' என கமெண்ட் பண்ணியுள்ளார் கலைஞர். அதேபோல, 2, 3 தொகுதிகளுக்கு பணம் கட்டியவர்களையும் தொகுதி மாறி பணம் கட்டியவர்களையும் கலைஞர் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தெடுத்தார்.
 நாங்குநேரிக்கு பணம் கட்டிய ஆரோக்கிய எட்வினிடம், "இந்த சின்ன வயசுலேயே பன்னாட்டு கம்பெனியில பெரிய பொறுப்புல இருக்கிற நீங்க, எதுக்கு அரசியலுக்கு வரணும்?'னு கலைஞர் கேட்க, "மாணவ பருவத்திலிருந்தே கட்சியில இருக்கேன். அரசியலில் இளைஞர்கள் வரணுங்கிறது என்னோட ஆசை அய்யா' என்று எட்வின் சொல்ல, "கட்சியில ஏதேனும் பொறுப்புல இருந்திருக்கிறீயா?' என துரைமுருகன் கேட்க, "பொறுப்புகளில் இதுவரை இல்லை. ஆனா, இணையத்தளங்கிற பேச்சு உருவான 2011-ல் முதன்முதலா இணையத் தள தி.மு.க. என்ற குரூப்பை ஆரம்பிச்ச 5 பேருல நான் ஒருத்தன். இன்னைக்கு 20 ஆயிரம் பேர் அதுல இருக்காங்க' என்றார் எட்வின். இவர் மட்டுமே கலர் பேண்ட் சர்ட்டில் வந்திருந்தார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு பார்த்திபனிட மும் ராதாபுரம் தொகுதிக்கு வீனஸ் வீர அரசுவிட மும் அம்பாசமுத்திரத்திற்கு பானுமதியிடமும் தென் காசிக்கு சிவபத்மநாதனிடமும் குறுக்குக்கேள்வி களைக் கேட்டார் கலைஞர். சிலரிடம், கூட்டணி யில் தே.மு.தி.க. இருக்கணுமான்னு கலைஞர் கேட்க, "இருந்தா நல்லது. இல்லைன்னாலும் நமக்கு பாதகமில்லங்கய்யா' என்று சொன்னார்கள். மேலும், கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு, "தமிழகத்தில் எப்போதும் அரித்மேட்டிக் கால்குலேசன்தான் வொர்க் அவுட் ஆகுதுங்கய்யா. அதனால் தே.மு.தி.க., காங்கிரஸ் இருந்தா ஈசியா ஜெயிச்சிடமுடியும்'னு பலரும் சொன்னாங்க.

இறுதி யில், "யாரை வேட்பாளரா போடணும்னு நீங்க சொல்றீங்க'ன்னு அந்தந்த மா.செ.க்களிடம் எழுதி வாங்கிக் கொண்டார் கலைஞர்'' என்று விவரித் தனர் அறிவாலய உ.பி.க்கள். முதல் இரண்டு நாளில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 750 பேரிடம் நேர்காணலை நடத்தி முடித்தார் கலைஞர். நேர் காணலை சந்தித்துவிட்டு வந்த பலரிடம் நாம் பேசியபோது, ""எப்பவும் மா.செ.க்களை வைத்துக் கொண்டுதான் நேர்காணலை நடத்துவார் தலைவர். இந்தமுறை மா.செ.க்களுக்கு நோ என்ட்ரி. அதனால எவ்வித பயமும் சங்கோஜமுமில்லாம பதில் சொல்ல முடிஞ்சது'' என்கிறார்கள் மிகவும் உற்சாகமாய்.
 நேர்காணல். ;-இரா.இளையசெல்வன்;படம்: எஸ்.பி.சுந்தர்  nakkheeran,in

கருத்துகள் இல்லை: