சென்னை: தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை விஜயகாந்த்
தெளிவாகச் சொல்லவில்லை. அவர் திமுக மற்றும் பாஜகவுடன் ஒரே நேரத்தில் பேரம்
பேசி வருவதாக கூறப்படும் நிலையில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை சுமூகமாக
நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை
செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழிசை. அப்போது
இதுகுறித்து அவர் கூறுகையில், தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் கூட்டணி பற்றி
அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை. விஜயகாந்த் உடன் முதல் சுற்று
பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளது.
2014ல் அமைந்த பாஜக கூட்டணியை மீண்டும் அமைக்க முயற்சி செய்கிறோம். பாஜக
அங்கம் வகிக்கும் கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
தமிழகம் மிகை மின் மாநிலமாக திகழ்வதாக சட்டசபையில் அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு மின்சாரம் வழங்கியதால்தான் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. மத்திய தொகுப்பில் இருந்து 71 சதவிகிதம் மின்சாரம் தென் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் மத்திய அரசு 45,000 மெகாவாட் மின்சாரம் வழங்கியுள்ளது என்றார் தமிழிசை. முதல் சுற்று முடிந்து விட்டதாக தமிழிசை கூறியுள்ள போதிலும், இதுகுறித்து தேமுதிக தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. இன்னும் எத்தனை சுற்று நடக்கும் என்றும் தெரியவில்லை
Read more ://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக