2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ! பிரதமரின் ஒப்புதல் பெற்றே 2ஜி உரிமங்கள்
வழங்க முடிவு செய்யப்பட்டதாக ஆ.ராசா பரபரப்பு வாக்குமூலம்
2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை, பதிவு செய்யும் பணி துவங்கியுள்ளது. முதல் நபராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ராஜா, மூன்று மணி நேரத்திற்குள், 1,200 கேள்விகளுக்கு பதில் அளித்தார். '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கின் விசாரணை, டில்லியில் பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கில், ஏற்கனவே, சி.பி.ஐ., தரப்பில், இரண்டு குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சி.பி.ஐ., அதிகாரிகள் சார்பிலான வாக்குமூலங்களும், பதிவு செய்யப்பட்டு விட்டன. 153 பேர்சி.பி.ஐ., தரப்பு : சாட்சியங்களாக, 153 பேரின் வாக்குமூலங்களும், பதிவு செய்யப்பட்டு விட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், வாக்குமூலம் பதிவு செய்ய துவங்கியபோது, தங்களுக்கு, இன்னும் கால அவகாசம் வேண்டுமென, நீதிபதி ஓ.பி.சைனியிடம், குற்றம் சாட்டப்பட்ட சிலர், கோரிக்கை வைத்தனர். ஆக, நேற்று கனிமொழியும் நீதிமன்றத்தில் ஆஜர்.... ஜெயலலிதா, சசிகலாவுக்கு மட்டும் தனி சட்டங்கள்..நமது நாட்டில் நீதி பரிபாலனமும் அசிங்கமாகி விட்டது.
கூட்டணி வைக்க வில்லை என்ற ஒரே ஆதங்கத்தால், திமுககாரர்களை காங்கிரஸ் அரசு அரசியல் கால்புனற்சியால், பொய் வழக்குகள் போட்டு வருகிறது. பெண் என்றும் பார்க்காமல், கனிமொழியின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு
ஆனால், 'வழக்கை தாமதம் செய்யும் வகையிலான, இது போன்ற கோரிக்கையை ஏற்க முடியாது' எனக் கூறிய நீதிபதி, 'மே 5ல், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம், வாக்குமூலம் பதிவு செய்யப்படும்' என, அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம், வாக்குமூலம் பெற்று, அதை பதிவு செய்யும் பணி துவங்கியது. நேரடி உரையாடல் பாட்டியாலா கோர்ட்டிற்கு, காலையிலேயே, தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சருமான, ராஜா உள்ளிட்ட, பலரும் வந்து விட்டனர். நீதிபதி, ''வாக்குமூலம் பதிவு செய்யும் பணி, துவங்கலாம். இந்த வாக்குமூலமானது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், நீதிபதிக்கும் இடையிலான, நேரடி உரையாடலாக கருதப்படும். கேள்விக்கு பதில் கூறுவதும், தவிர்ப்பதும், அவரவர் விருப்பம்,'' என்றார்.
மொத்தம், 824 பக்கங்கள் அடங்கிய அந்த பட்டியலில், 1,718 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இந்த கேள்விகளுக்குரிய பதில்களை, ராஜா உட்பட, குற்றம் சாட்டப்பட்ட, 17 பேரும், ஏற்கனவே தயார் செய்து வந்திருந்தனர் கம்ப்யூட்டர் வாயிலாக:
நீதிபதியின் இரு புறங்களிலும், இரண்டு தட்டச்சர்களும், ஒரு புறம் ராஜாவும் அமர்ந்திருக்க, கம்ப்யூட்டர் வாயிலாக, கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு, ராஜாவின் சார்பில், பதில் அளிக்கப்பட்டது.மதிய உணவுக்காக, 1:10 மணிக்கு, இடைவேளை விடப்பட்டது. அதற்குள், 1,200 கேள்விகள் வரை, கேட்டு முடிக்கப்பட்டிருந்தன.
குற்றம் சாட்டப்பட்ட, 17 பேரில் ஒருவரான கனிமொழி, காலையிலேயே, கோர்ட்டுக்கு வந்து இருந்தார். 15 நிமிடங்கள் அமர்ந்திருந்த அவர், அனைவருடனும் பேசிக் கொண்டிருந்தார். தனக்கான சுற்றுக்கு, இன்னும் அவகாசம் இருப்பதை அறிந்த அவர், வீட்டிற்கு கிளம்பிச் சென்று விட்டார்.
- நமது டில்லி நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக