தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல்
அத்துமீறல் வழக்கு தொடர்பாக, கோவா போலீஸார் அனுப்பிய கேள்விகளுக்கு
ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ தனது பதில்களை அனுப்பியுள்ளார்.
தருண் தேஜ்பால் மீதான் பாலியல் வழக்கு பனாஜியில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், பெண் பத்திரிக்கையாளரை, ஐந்து நட்சத்திர ஹோட்டல்
ஒன்றின் லிஃப்டில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெஹல்கா முன்னாள்
ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது கோவா கிரைம் பிராஞ்ச் போலீஸார்
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நிரோ மற்றும்
அவரது மகளை சந்தித்து விட்டுத் திரும்பும்போது இச்சம்பவம் நடந்ததாகக்
கூறப்படுகிறது. இது தொடர்பாக, ராபர்ட் டி நீரோவுக்கு கோவா போலீஸ் சில
கேள்விகளை அனுப்பியது.
இந்த நிலையில், "கோவா குற்றப் பிரிவு போலீஸார் அனுப்பிய கேள்விகளுக்கான
பதில்களை ராபர்ட் டி நீரோ அனுப்பிவிட்டார்.
அவற்றை விசாரணை அதிகாரி சுனிதா சாவந்த் அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார்" என்று கோவா டி.ஐ.ஜி மிஷ்ரா தெரிவித்தார்.
அவற்றை விசாரணை அதிகாரி சுனிதா சாவந்த் அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார்" என்று கோவா டி.ஐ.ஜி மிஷ்ரா தெரிவித்தார்.
சென்ற வருடம் நவம்பர் மாதம் கோவாவில் நடந்த 'திங் ஃபெஸ்ட்' விழாவில் டி
நீரோ இருந்ததை அவரது வழக்கறிஞர்கள் ஹார்வே மற்றும் ஹாக்கெட் ஆகியோர் உறுதி
செய்துள்ளனர்.
மேலும், டீ நிரோ மற்றும் அவரது குடும்பத்தினரை பாதிக்கப்பட்ட பெண்
பத்திரிக்கையாளர்தான் வரவேற்று உபசரித்தார் என்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை தெரிவிக்க மிஷ்ரா மறுத்துவிட்டார். tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக