ஞாயிறு, 4 மே, 2014

ஏழைகளிடம் இருந்து சுரண்டிய தங்கம் பத்மநாபசாமி கோயிலுக்கே சொந்தம் ? ஆதிவாசிகள் இன்னமும் அடிமைகளே

பத்மநாப சுவாமி கோயிலில்சுரங்க பாதையில் 2500 ஆண்டு பழங்கால பாத்திரம் கண்டுபிடிப்பு பொக்கிஷ விவகாரம் தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோயில் ரகசிய அறைகளில் இருந்து ஏராளமான அளவில் பொக்கிஷங்கள் கடத்தப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கும் இந்த கடத்தலில் பங்கு இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கோயிலை நிர்வாகம் செய்ய திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி இந்திரா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பொக்கிஷங்களின் மதிப்பை கண்டறிவதற்காக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆனந்தபோஸ் தலைமையிலான கமிட்டியை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்கமிட்டி ‘பி‘ அறை தவிர மற்ற 5 ரகசிய அறைகளையும் திறந்து பொக்கிஷங்களை மதிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
மன்னர் குடும்பத்தினர் ரகசிய அறைகளில் இருந்து பொக்கிஷங்களை கடத்தியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்த போஸ் குற்றம் சாட்டினார்.இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து கூறப்பட்ட புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மன்னர் குடும்பத்தை சேர்ந்த கவுரி லட்சுமிபாய் கூறுகையில், :'கோயில் பொக்கிஷங்கள் பத்மநாபனுக்கே சொந்தம். எங்கள் குடும்பத்தினர் யாரும் கோயிலில் இருந்து எந்த பொருளையும் கடத்தவில்லை. செய்யாத குற்றத்துக்காக எங்கள் குடும்பம் வேதனையை அனுபவிக்கிறது. காலம் வரும் போது புகார்களுக்கு தகுந்த பதில் அளிப்போம்:' என்றார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பத்மநாப சுவாமி கோயிலின் 4 வாசல்கள் முன்பாக தானியங்கி தடுப்பு அரண் அமைக்கப்படுகிறது. இதற்காக வடக்கு வாசலில் பள்ளம் தோண்டப்பட்ட போது, படிக்கட்டுகள் தென்பட்டன. அது சுரங்க பாதையாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால், தொல்பொருள் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த அகழ்வாய்வில் பழங்கால பாத்திரம் கிடைத்தது. இது 2400 முதல் 2500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. - tamilmurasu.org  அடிமை ஆதிவாசிகள் இன்னமும் அடிமைகளே  லு 

கருத்துகள் இல்லை: