சனி, 10 மே, 2014

ஜெயலலிதா ஆதரவுடன் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சி ! அடுத்து வைகோ, விஜயகாந்த், தமிழருவி, அன்புமணி


புதுடில்லி : லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எதிர்பார்த்தப்படி தனிபெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஜெயலலிதா, நவீன் பட்நாயக் உள்ளிட்ட மாநில தலைவர்களின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சி செய்து வருகிறது. இதற்காக அவர்களிடம் ஆதரவு கேட்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது.பா.ஜ., அழைப்பு : லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருக்கும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக பா.ஜ., தனது எண்ணத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. தேர்தலில் பா.ஜ., 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் என பா.ஜ., தலைவர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருப்பினும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மாநில கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது.  பி.ஜே.பி.கடைசியில் ஜெயா காலில் விழவேண்டியதுதான் .ம்ம்ம் விதி ? வாஜ்பாய் பட்ட சோகம் மறக்க கூடியதா என்ன ? முதல்ல வாய்தாராணி ஒத்தை டிஜிட்டை தாண்டட்டும் !  
ஆனால் மம்தா, முலாயம் சிங், மாயாவதி ஆகியோர் எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.,வை ஆதரிக்க மாட்டோம் என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், பா.ஜ., வெளிப்படையாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது தேசிய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆதரவு தருவாரா ஜெ? :

பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், மாற்று ஏற்பாடு செய்யும் முயற்சியையும் பா.ஜ., இப்போதே துவங்கி உள்ளது. பா.ஜ., ஆதரவு கேட்க வாய்ப்பு உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியலில் முன்னணியில் இருப்பது தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 25க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதாலும், மோடிக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே சுமூகமான நட்பு நிலவுவதாலும் பா.ஜ., ஜெயலலிதாவை நாட திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக பா.ஜ., குறி வைத்துள்ளது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். வாஜ்பாய் காலத்தில் பா.ஜ., கூட்டணியில் இருந்ததாலும், 10க்கும் மேற்பட்ட இடங்களை நவீன் பட்நாயக் பெறுவார் என்பதாலும் பா.ஜ., விற்கு அவர் ஆதரவு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஏற்கனவே பா.ஜ., கூட்டணியில் உள்ளது.
மாயாவதி திட்டவட்டம் :
மோடி சமீபத்தில் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் தனிபெரும்பான்மை பெற முடியாது எனவும், அதனால் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா ஆகியோரின் ஆதரவை கேட்க உள்ளதாகவும் கூறி உள்ளார்; நான் மற்ற கட்சிகளை பற்றி பேச விரும்பவில்லை; என்னை பொருத்தவரை மோடிக்கோ, பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கோ நானும் எனத கட்சியும் ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டோம் என மாயாவதி திட்டவட்டமாக தனது முடிவை தெரிவித்துள்ளார். மாயாவதி, மம்தா, முலாயம் ஆகியோர் தங்களின் முடிவை வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில் நவீன் பட்நாயக்கோ, ஜெயலலிதாவோ தங்களின் நிலைப்பாடு குறித்து தொடர்ந்து மவுனம் காத்தே வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி 250 இடங்களை கைப்பற்றும் பட்சத்தில் புதிய கூட்டணி என்பது பிரச்னையே அல்ல. ஆனால் 250 இடங்களுக்கும் குறைவான இடங்களை பெறும் பட்சத்தில் ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் பா.ஜ.,வும், மோடியும் தங்களின் நிர்வாக திறமைகள் குறித்த கருத்துக்களை தேர்தல் பிரசாரத்தில் மக்கள் முன் வைத்துள்ளதால், பெரும்பான்மை கிடைக்கும் என்றே அக்கட்சியினர் திடமான நம்பிக்கை கொண்டுள்ளனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: