விஜய் டிவியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் ஆண்டனி,
பெரிய திரைப்பக்கம் ஒதுங்கியிருக்கிறார். ‘அழகு குட்டி செல்லம்’ என்ற
பெயரில் குழந்தைகளுக்கான படம் ஒன்றைத் தயாரித்து வருகிறார். இப்படத்தைப்
பற்றி சொல்லும் ஆண்டணி, “ ‘அஞ்சலி’, ‘பூவே பூச்சூடவா’ போன்ற படங்களின்
வரிசையில் இந்தப் படமும் இருக்கும். இந்த படத்தில் வரும் விஷயங்கள் எல்லா
அம்மாக்களுக்கும் நடந்திருக்கும். அதனாலேயே இதன் தலைப்புக்கு கீழே, ‘COME
WITH YOUR MOTHER’ என்று போட்டிருக்கிறோம்” என்றார்.
இப்படத்தின் இயக்குநர் சார்லஸ் கூறுகையில், “இந்த உலகமே குழந்தைகளுக்காகத்
தான் நடந்துகொண்டு இருக்கிறது. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், ஏதோ ஒரு
நம்பிக்கையை இந்த பூமிக்கு கொண்டு வருகிறது.
‘மானிடம் மொத்தமுமே குழந்தைகளுக்காக தான் பணியாற்றுது’ என்பது தான் இந்தப் படத்தின் ஐடியா.
‘மானிடம் மொத்தமுமே குழந்தைகளுக்காக தான் பணியாற்றுது’ என்பது தான் இந்தப் படத்தின் ஐடியா.
பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையில் குழந்தைகள் எப்படியெல்லாம்
இருக்கிறார்கள் என்பதை இப்படம் சொல்கிறது. குழந்தை பிறக்காத ஒரு அப்பா -
அம்மாவோட வலி, வேதனை ஒரு கதை, இன்னொரு குடும்பத்துக்கு நிறைய குழந்தைகள்
இருக்கும் ஆனால் எல்லாமே பெண் குழந்தைகள். அவங்களுக்கு ஆண் குழந்தை இல்லையே
என்பது கவலை. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான ஒரு பெண், அதற்கு காரணமான
டீன் ஏஜ் பையன் உண்டாயிருக்குற குழந்தையை என்ன செய்வது என்ற அவர்களின் கவலை
ஒரு கதை. இப்படி குழந்தையை மையமாவைத்து பல்வேறு கதைகள் இணைந்த ஒரே கதை
தான் இந்தப் படம்.
இந்தப் படத்தில் கூவத்திற்கு பக்கத்தில் குழந்தை கிடப்பது மாதிரி ஒரு
காட்சி இருக்கிறது. இதற்கு பல பேர் குழந்தையை நடிக்கத் தரவில்லை. இந்த
நேரத்தில் எனக்கு ரெண்டாவது குழந்தை பிறந்தது. அதனால, என் குழந்தையையே
பயன்படுத்திக் கொண்டேன்.
இந்தப் படத்துக்காக நா.முத்துக்குமார் 4 பாடல்கள் எழுதியிருக்கிறார்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக