தென்னிந்திய
சினிமாக்காரர்களுக்கு பெருந்தன்மை இல்லை என்று ஆவேசமாக கூறினார்
லட்சுமிராய். இது பற்றி அவர் அளித்த பேட்டி:வித்யாபாலன் நடித்த ‘இஷ்கியா
இந்தி படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் வித்யாபாலன் ஏற்று நடித்த ரோலை
தமிழில் நான் ஏற்பேன். அதை ஏற்று நடிக்க ஆசைப்படுகிறேன். இதுவரை சவாலான
அப்படியொரு கேரக்டர் நான் செய்ததில்லை. மலையாள படங்களில் எனக்கு ராசியான
நடிகை என்று பெயர் இருக்கிறது. அங்கு நடித்தபிறகுதான் என் சினிமா
வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ், தெலுங்கிலும் நல்ல
வாய்ப்புகள் வரத் தொடங்கின. எப்போதுமே, படத்தில் நீண்ட நேரம் வருகிற வேடமா
என்று பார்த்து ஏற்பதில்லை. வலுவான வேடமா என்றுதான் பார்க்கிறேன். குத்து
பாடலுக்கு நடனம் ஆடுவது ஏன் என்கிறார்கள். எனது நடனத்தை பார்க்க ரசிகர்கள்
விரும்புகிறார்கள். அதனால்தான் அந்த வாய்ப்பை ஏற்கிறேன். ஆனால்
தென்னிந்திய சினிமாக்காரர்கள் பெருந்தன்மையாக ஏற்காமல் உடனே குத்து நடிகை
என்று முத்திரை குத்திவிடுவார்கள். பாலிவுட்டில் அப்படி இல்லை. நெருக்கமான
காட்சிகளில் நடிப்பது பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை ஆனால் அது மசாலாவுக்காக
திணிக்கப்பட்டதாக இருக்காமல் காட்சிக்கு தேவை என்ற கட்டாயம் இருந்தால்
மட்டுமே ஏற்பேன். இவ்வாறு லட்சுமிராய் கூறினார் - tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக