பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களான
ஹிந்துக்களுக்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த ஹிந்து கோவிலில் வழிபட உரிமை
மறுக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விளக்க அறிக்கைத் தாக்கல்
செய்யுமாறு அரசுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெஷாவரில் கோவில் மற்றும் தேவாலயங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது
தொடர்பாக கராச்சியில் உள்ள உச்ச நீதிமன்றக் கிளை தாமே முன்வந்து புதன்கிழமை
விசாரணை நடத்தியது. அப்போது," சிந்து மாகாணத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த
ஹிந்துக் கோவிலில் சிறுபான்மை ஹிந்துக்கள் வழிபட அனுமதி மறுப்பதாக
அம்ரபூர் அஸ்தான் பிரேம் பிரகாஷ் பந்த் என்ற அமைப்பு சார்பில் ரீஹோ மால்
என்பவர் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த தலைமை
நீதிபதி தஸ்ஸாதுக் ஹுசைன் ஜிலானி தலைமை
யிலான அமர்வு, அரசுக்கு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. dinamani.com
யிலான அமர்வு, அரசுக்கு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக