அகமதாபாத், பிப். 24- பி.ஜே.பி. ஆளும்
குஜராத் மாநிலத்தில் இலஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பி.ஜே.பி. முன்னணியினர்
பணம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளில் வேலைய மர்த்தம் செய்வது சர்வ சாதா
ணமாகி விட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முற்றிலு மாக
ஒழித்திட முடிவு செய் யப்பட்டுள்ளது.
இதன் காரண மாக 13,000 பேர்களின் வேலை
வாய்ப்புப் பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் செல்
வாக்கு மிக்க பாஜக தலை வர்கள் இளைஞர்களிட மிருந்து லட்சக்கணக்கில் பணம்
வாங்கிக் கொண்டு அரசு வேலையை வழங்கி வருவது சமீபத்தில் வெளி யாகியுள்ளது.
கைது செய் யப்பட்ட பாஜக தலைவ ரிடமிருந்து
ரூ.1.43 கோடியை உள்ளூர் குற்றப் பிரிவு காவல் துறையினர் பறி முதல்
செய்தனர். 16ஆவது நாடாளுமன் றத்திற்கான தேர்தல் ஏப்ரல் அல்லது மே
மாதங்களில் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியைப் பெற
முடியாத பாஜக இம்முறை எப்படி யாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று
கங்கணம் கட்டிக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பாஜகவின் பிரதம வேட்பாளராக நியமிக்கப்
பட்டுள்ள நரேந்திர மோடி நாடுமுழுவதும் சுற்றி பிரச் சாரத்தில் ஈடுபட்டு வரு
கிறார். செல்லும் இடங் களுக்கெல்லாம் அந்தப் பகுதியில் உள்ள உள்
பிரச்சினைகளைப் பேசும் மோடி, நாட்டின் வளர்ச்சிக் கென்று எந்த ஒரு உருப்படி
யான திட்டத்தையும் தெரி விப்பதில்லை.
ஆனால், தான் ஆளும் குஜராத் மாநி லம்
அனைத்து விதத்திலும் முன் மாதிரியாக உள்ளது. இளைஞர்கள் அதிகார மிக்கவர்களாக
உள்ளனர். வேலைவாய்ப்பு செழிப் பாக உள்ளது. தொழில் வளர்ச்சியடைந்துள்ளது
என்று போலியான தகவல் களைக் கூறி வருகிறார். இதேபோன்று, அகமதா பாத்தில்
வியாழனன்று நடைபெற்ற இளைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி, காங்கிரஸ்
செய்வதாக ஆவேசமாகப் பேசிக் கொண் டிருந்தார்.
அதேநேரம், குஜராத் தில் அரசு வேலை
வாங்கித் தருவதாக இளைஞர் களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்ற பாஜக தலைவரை
காவல்துறை யினர் கைது செய்து கொண் டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
குஜராத் மாநிலத்தில் மூத்த எழுத்தர்
பல்நோக்கு சுகாதார ஊழி யர் போன்ற மூன்றாம் நிலைப் பணிகளுக்கு அரசு
துறைகளில் காலியாக உள்ள 1200 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடந் தது,
சமீபத்தில் வெளிச்சத் திற்கு வந்தது. இந்தப் பணி களை அரசுடன் நெருங்கிய
தொடர்புள்ள பாஜக தலை வரான கல்யாண்சிங் சம் பவாத் என்பவர் லட்சக் கணக்கில்
பணத்தைப் பெற்றுக்கொண்டு விற்ப னை செய்துள்ளனர்.
அரசுப் பணியிடங்களைப் பெறு வதற்கு ஆர்வமாக
இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர் களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கப்பட்டுள்
ளது. இதற்கு சில இளை ஞர்கள் ஒப்புக் கொண்டுள் ளனர். அவர்களை காந்தி நகரில்
உள்ள ஸ்மார்ட் அகாடமி மற்றும் பெர்சனா லிட்டி டெவலப்மெண்ட் என்ற பயிற்சி
மய்யத்திற்கு அழைத்துள்ளனர்.
விடைத்தாள்களில் ரகசியக் குறியீடு
பின்னர், அவர்களிடம் பணம் பெற்றுள்ளனர்.
பணத்தைக் செலுத்திய மாணவர்கள் எழுத்துத் தேர் வில் வெற்றி பெறுவதை
உறுதிப்படுத்தும் வகை யில், அவர்களது விடைத் தாளில் ரகசிய குறியீட்டை
குறிக்கும்படி அறிவுறுத்தி யுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு பல்
வேறு புகார்கள் வந்திருக் கிறது. புகாரை கண்டு கொள் ளாமல் இருந்த நிலையில்,
ஒரு பகுதியினர் இந்த முறைகேட்டை எதிர்த்து போராடவும் முடிவு செய்
திருந்தனர்.
பலர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்
தணிக்கைக்கு உட்ப டுத்தி அம்பலப்படுத்தவும் தயாராகி வந்தனர். இது குறித்து
தகவலறிந்த குற்றப் பிரிவு காவல்துறையினர் பயிற்சி மய்யத்தில் அதிரடி யாக
சோதனை நடத்தினர். அப்போது கல்யாண்சிங் சம்பவாத் கையும் களவு மாக
பிடிபட்டார்.
அவரு டைய உதவியாளர் நிஷால் ஷா என்பவரையும்
காவல் துறையினர் கைது செய் தனர். இவர்களிடம் பணம் கொடுத்ததாக சுமார் 20
மாணவர்கள் ஒப்புக் கொண் டுள்ளனர். இவர்களிட மிருந்து ஒரு கோடி ரூபாய்க்
கும் மேல் பணம் வசூலிக் கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
பின்னர் கல்யாண் சிங்கை காவல்துறை
பொறுப்பில் எடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அனில் மேவதா
மற்றும் நைனேஷ் ஜெய்ஸ்வால் என்ற இருவரின் பெயரைத் தெரிவித்துள்ளார். விசார
ணைக்குப் பின்னர் இது போன்று பல்வேறு ஊழல் களில் கல்யாண்சிங்கிற்கு
தொடர்பிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள் ளனர்.
கைது செய்யப் பட்டவர்களிடமிருந்து ரூ.ஒரு
கோடியே 43 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக குஜராத் தில்
நிரப்பப்பட்ட காவலர் பணியிடங்கள் உள்பட பல் வேறு அரசுப் பணியிடங் கள்
நிரப்பப்பட்டதில் பல்வேறு ஊழல்கள் நடை பெற்றுள்ளதாக குற்றச் சாட்டு
எழுந்திருக்கிறது.
நாட்டின் அனைத்து மாநி லங்களிலும்
நடைபெற்று வரும் ஊழல்களை சகித் துக்கொள்ள முடியாத மோடி, தன் மாநிலத்தில்
நடைபெறும் ஊழல்கள் மற்றும் அரசுத் தேர்வு களில் பாஜகவினரின் தலை யீடுகள்
பற்றி மக்களிடம் பேசாதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்
பியுள்ளனர்.
ஆயிரக்கணக்கில் வேலை இழப்பு
கிராமப்புற மக்களின் வேலையை உறுதிப்படுத்
தும் வகையில் மத்திய அரசு ஏற்படுத்திய மகாத்மா காந்தி ஊரக வேலை உறு தித்
திட்டப் பணியாளர் களை மொத்தமாக வீட்டிற்கு அனுப்ப மோடி அரசு முடி
வெடுத்துள்ளது. இத்திட் டத்தின் கீழ் 13 ஆயிரத்திற் கும் மேற்பட்ட
ஊழியர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில், 10 ஆயிரத் திற்கும் மேற்
பட்டோரை வீட்டிற்கு அனுப்பவுள்ள தாக அரசு சமீபத்தில் சுற் றறிக்கை
விட்டுள்ளது.
இது இந்த மாதம் 28ஆம் தேதி முதல் அமலுக்கு
வருவதா கவும் அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் அரசு
வேலை கள் பணமயமாகிப் போன சூழலில், ஆயிரக்கணக் கான இளைஞர்களின் வேலை
வாய்ப்புகள் பறிக்கப்படு வது கிராமப்புற இளைஞர் களின் வாழ்வை மேலும் சிர
மத்திற்குள்ளாக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக