எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை - வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் இலக்கிய உலகில் 'ஜே.கே' என்று அழைக்கப்படும் 80 வயது எழுத்தாளர்
ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றலில் பாதிப்பால்
அவதியுற்று வந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த
அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
1950களில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயகாந்தன், மத்திய அரசின்
இலக்கியத்துக்கான மிக உயரிதாகக் கருதப்படும் ஞான பீட விருதைப் பெற்றவர்.
அரசியல், இலக்கியம், சினிமா என பல்வேறு தளங்களில் இயங்கிய ஜெயகாந்தன், 'சில
நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' முதலான பல
படைப்புகளால் கவனத்தை ஈர்த்தவர்.
தனது தைரியமான எழுத்துகளால் சமூகத்தைப் பிரதிபலித்த எழுத்தாளராகப்
போற்றப்பட்ட இவர், இளம் எழுத்தாளர் பலருக்கும் எழுத்துலகில் பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக