சனி, 1 மார்ச், 2014

அதிமுக அரசின் மக்கள் விரோதம்: மதுரவாயல் பறக்கும் சாலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு


மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு, தமிழக அரசு தடை பெறாமல் தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை கேவியட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மதுரவாயல் -  துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்குத் தமிழக அரசு விதித்த தடை உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்திற்குப் பொதுமக்கள், நாட்டின் முன்னேற்றத்திற்காக நீதிபதிகள் அனுமதி வழங்குவதாகக் கூறினர்.சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை எளிதாக லாரிகளில் கொண்டு செல்லும் வகையிலும் மதுரவாயல் - துறைமுகம் இடையே பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் ரூ.1800 கோடியில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த திட்டத்துக்குத் தமிழக அரசு தடை விதித்தது.

இந்தத் தடையை நீக்கக்கோரி, தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு விதித்த தடையை ரத்து செய்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதை எதிர் கொள்ளும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக நேற்று உச்சநீதிமன்றத்தில் கேவியேட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
viduthalai.in/  

கருத்துகள் இல்லை: