ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

நரேந்திர மோடி பிரதமராக மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு -

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, Ôகலவர சக்திகளின் கட்சியான பாஜவின் வேட்பாளர் மோடி பிரமராக கூடாதுÕ என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் டிவிக்கு மம்தா அளித்த பேட்டியில் கூறியதாவது, பாஜ ஒரு கலவர சக்திகளின் கட்சி. அது ஆட்சிக்கு வருவது கலவர சக்திகள் ஆட்சிக்கு வருவதற்கு சமம். எனவே மோடி பிரதமராக வரக் கூடாது. பாஜ ஒன்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று அல்ல. அதே போல் காங்கிரஸ் கட்சியும் பாஜவுக்கு மாற்று கிடையாது. பாஜ போன்ற கலவர கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்றிவிட முடியாது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி கூட்டணி நிச்சயம் 42 இடங்களையும் கைப்பற்றும். மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து திரிணாமுல் முக்கிய பங்கு வகிக்கும்.


இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு திறமையும், செல்வாக்கும் உள்ள எத்தனையோ தலைவர்கள் பிரதமராக ஆவதற்கு தயாராக உள்ளனர். அடுத்த பிரதமர் யார் என்பதை ஜனநாயக முறையில்தான் முடிவு செய்ய வேண்டும். அதை தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள். இந்த தேர்தலில் பாஜவும், காங்கிரசும் பாதிக்கு பாதி சரிவடையும்.

முற்போக்கு சக்திகள்தான் முன்னுக்கு வரும். இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் படுதோல்வி அடையும். எனவே 3வது அணி என்ற பேச்சுக்கே அங்கே இடம் இருக்காது. இவ்வாறு மம்தா கூறினார். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: