சனி, 1 மார்ச், 2014

பெங்களூரில் BAR உணவகங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை அனுமதி


நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனிக்கிழமைகளில் பார் மற்றும் ரெஸ்டாரண்டுகள் நள்ளிரவு 1 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படுவதாக, மாநில உள்துறை அமைச்சர் கெ.ஜெ. ஜார்ஜ் அறிவித்துள்ளார். இரவு 1 மணி வரை கால நீட்டிப்பு செய்துள்ளதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் காவல்துறையினர், சுற்றுலாத்துறை மற்றும் கலால் துறையிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், பெரும்பாலோனோர் பணிமுடிந்து திரும்புகையில் ரெஸ்டாரண்டுகள் போன்றவை மூடப்பட்டுவிடுவதால் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர். அதன் பின்பே இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் கூறியதாவது :- பெங்களூர் ஒரு காஸ்மோபோலிடன் நகரம் என்பதால் நாடு முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். அவர்களின் பரபரப்பான வாழ்க்கைக்கு பொழுதுபோக்கிற்கான இடங்கள், குறிப்பாக ரெஸ்டாரண்டுகளை ஏற்பாடு செய்வது முக்கியமானதாகும். பல்வேறு தரப்பினரிடமிருந்து வாரம் முழுவதும் கால நீட்டிப்பு செய்யக் கோரிக்கைகள் வந்தாலும் முதற்கட்டமாக வார இறுதிநாட்களில் மட்டும் அனுமதித்துள்ளோம். மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த கால நீட்டிப்பு மறுஆய்வு செய்யப்படும்.



இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய பா.ஜ.க ஆட்சியின்போது, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையடுத்து இரவு 11 மணிக்கு மேல் பார்கள் திறந்திருக்க அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: