புதன், 26 பிப்ரவரி, 2014

சிங்கப்பூரில் ப.சிதம்பரம்- விஜயகாந்த் சந்திப்பு?

சென்னை: சிங்கப்பூர் சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிக்காமலேயே பாஜக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தண்ணிகாட்டி வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இந்த நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார். விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. தோல் அலர்ஜிக்கு சிகிச்சை மேற்கொள்ளவே சிங்கப்பூர் சென்றதாகவும் அங்கு வணிக வளாகம் ஒன்றை வாங்குவதற்காக சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது. சிங்கப்பூரில் ப.சிதம்பரம்- விஜயகாந்த் சந்திப்பு? அத்துடன் கூட்டணி தொடர்பாக கடைசி கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும் விஜயகாந்த் அங்கு சென்றதாக கூறப்பட்டு வருகிறது. கேக்கிற டப்பு கிடைச்சா காங்கு கூத்தணி ? இல்லாங்கட்டி கப்டன் வேற அணி ? இவன்தாட்டா அரசியல்வாதி ஃ
இந்த நிலையில் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றிருந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நாடு திரும்பும் வழியில் நேற்று சிங்கப்பூரில் விஜயகாந்தை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் விஜயகாந்தை நேரில் சந்திக்காமல் 'தூதர்'கள் மூலம் சந்தித்ததாகவும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்தை பொறுத்தவரையில் கடந்த சட்டசபை தேர்தல் கூட்டணியை மலேசியாவில் வைத்துதான் இறுதி செய்தார். அதேபோல் இம்முறை சிங்கப்பூரில் வைத்துத்தான் லோக்சபா தேர்தல் கூட்டணியை இறுதி செய்வார் என்றும் தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: