ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

வாடகை வீட்டில் வசிக்கும் சிங்காரவேலரின் வாரிசுகள்- சொத்துகளை மீட்டுத்தருமாறு வேண்டுகோள்

சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

 சுதந்திரப் போராட்ட தியாகியான சிங்காரவேலர் ஆங்கிலேய அரசால் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட போது சென்னை கடற்கரைச் சாலை எதிரே அவர் வாழ்ந்து வந்த பல ஏக்கர் பரப்பளவு இடத்தை (தற்போதைய லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி வளாகம்) வெலிங்டன் பிரபு கைப்பற்றி எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் தனது மனைவி பெயரில் அந்த இடத் தில் கல்லூரியை நிறுவினார் என்பது வரலாறு. 

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை, தொழிற்சங்க இயக்கத்தின் பிதாமகன், இந்திய தொழிலாளர்களின் தந்தை என போற்றப்படும் சிந்தனைச் சிற்பி மா.சிங்காரவேலரின் 154-வது பிறந்த நாள் கடந்த 18-ம் தேதி கொண்டாடப்பட்டது.
சுதந்திரப் போராட்ட தியாகியான சிங்காரவேலர் ஆங்கிலேய அரசால் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட போது சென்னை கடற்கரைச் சாலை எதிரே அவர் வாழ்ந்து வந்த பல ஏக்கர்
பரப்பளவு இடத்தை (தற்போதைய லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி வளாகம்) வெலிங்டன் பிரபு கைப்பற்றி எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் தனது மனைவி பெயரில் அந்த இடத் தில் கல்லூரியை நிறுவினார் என்பது வரலாறு.
வாரிசுகளின் பரிதாப நிலை
மீனவ சமுதாயத்தில் செல்வந்தராகப் பிறந்த சிங்காரவேலர் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை கரைத்துக் கொண்டவர். சமூக அவலங்களுக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தார். அவ ருக்குச் சொந்தமான கோடிக்கணக் கான சொத்துகள் பல்வேறு அறக் கட்டளைகளால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
நிலைகுலைந்த குடும்பம்
சிங்காரவேலருக்கு கமலாபாய் என்ற ஒரேயொரு மகள் இருந்தார்.
ஆண் வாரிசு இல்லாததால் தனது இரு பேரன்களில் மூத்த பேரனான சத்திய
குமாரை மகனாக தத்தெடுத்தார் சிங்காரவேலர். அவர் இறந்த பிறகு அவரது சொத்துகளையும், அறக்கட் டளையையும் சத்தியகுமார்தான் நிர் வகித்தார். சத்தியகுமார்-பத்மா தம்பதி யருக்கு 5 பெண் குழந்தைகள்.
இந்த சூழலில், தனது 36வது வயதில் அகால மரணம் அடைந்தார் சத்திய குமார். 5 பெண் குழந்தைகளுடன் தனி மரமான இளம் பெண் பத்மா செய்வதறி யாது திகைத்தார். பொருளாதார பிரச் சினைகளை சமாளித்து 5 பெண்களை யும் கல்லூரியில் படிக்க வைத்தார்.
பாரம்பரியம் தெரிந்தது
மூத்த மகளான வள்ளிக்கு திருமணம் முடிந்த நிலையில், குடும்பத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் அடுத்த இரு மகள்களான தனலட்சுமி, ஜெயலட்சுமி இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. 4-வது மகளான டாக்டர் அனிதாவை இலங்கை தமிழர் பி.வசந்தகுமாரன் கரம்பிடித்தார்.
ஓர் ஏழைப் பெண்ணை திருமணம் முடிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்த வசந்தகுமாரனுக்கு தெரிந்தவர் கள் மூலம்தான் அனிதாவின் குடும்பம் அறிமுகமானது.
திருமணம் முடிந்த ஓராண்டு கழிந்த பின்னரே, தான் திரு மணம் முடித்திருக்கும் பெண் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பேத்தி என்ற விவரம் வசந்தகுமாரனுக்கு தெரிய வந்தது. அவர்தான் அரசு ஆவண காப்பகம், காஞ்சிபுரம், திருவண்ணா மலை மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு அலைந்து சிங்காரவேலரின் சொத்து கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்.
சொத்துகளை மீட்க போராட்டம்
சிங்காரவேலருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து களை மீட்கவும், அறக்கட்டளை நிர் வாக உரிமையைப் பெறவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந் தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணை நடந்துகொண்டி ருக்கிறது.
இதற்கிடையே, அவரது மாமியார் பத்மா கடந்த ஆண்டு தனது 72-வது வயதில் மரணம் அடைந்தார். சிங்கார வேலரின் சொத்துகளை மீட்க கொள்ளுப் பேத்தியின் கணவர் என்ற உறவுமுறையில், தான் அனுபவித்து வரும் சிரமங்கள் குறித்து“தி இந்து” விடம் வசந்தகுமாரன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
 எனது மனைவியின் தாத்தாவான சிங்காரவேலர் பற்றிய முழு விவரம் தெரிந்ததும் அவரது வாழ்க்கை வர லாற்றை ஆராய்ந்து “இந்திய தொழிலா ளர் சங்கத்தின் பிதாமகன் ம.சிங்கார வேலர்” என்ற புத்தகத்தை எழுதினேன்.
சுமார் ஆயிரம் கோடி மதிப்புள்ள சிங்காரவேலரின் சொத்துகளை மீட்க சட்டரீதியாக போராடி வருகிறோம். அவரது வாரிசுள் வசிக்க சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாமல் மைலாப்பூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்துவரு கின்றனர். எனது மனைவியின் சகோதரிகள் தனலட்சுமி, ஜெயலட்சுமி, சுஜாதா ஆகியோரை நான்தான் பராமரித்து வருகிறேன் என்றார்.   tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: