கெப்ளர் திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்ட பல்வேறு வித கோள்கள் குறித்த விளக்கப்படம்.
புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டையில் குறிப்பிடத்தக்க
அளவு புதையல் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை
மனிதர்களால் அடையாளம் காணப் பட்ட கோள்களின் எண்ணிக்கை வியக் கத்தக்க
வகையில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.
புதிய கோள்களைத் தேடுவதற்காகவே அமைக்கப்பட்ட கெப்ளர் தொலைநோக்கி, 715 புதிய
கோள்களைக் கண்டறிய உதவிகரமாக இருந்துள்ளது.
நாம்வாழும் பூமியைப் போன்றே
வேறு கோள்கள் இருக்கக்கூடுமா என்ற ஆசையின் விளைவே இந்தத் தேடுதல் வேட்டை.
நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே தற்போது மட்டும் 715 புதிய கோள்கள்
கண்டறியப்பட்டுள்ளன என நாசா அறிவித்திருக்கிறது.
கெப்ளர் தொலைநோக்கி புதிய உத்தி மூலம் புதிய கோள்க ளுக்கான தேடலில் அதிகப்படியான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நாசா ஆய்வாளர் லிஸ்ஸாயர் கூறியதாவது: மனிதர்களுக்குத் தெரிந்த கோள்களின்
எண்ணிக்கை இன்று இரு மடங்காகியிருக்கிறது. 305 வெவ்வேறு நட்சத்திரங்களை 715
கோள்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் அறிந்த
கோள்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது” என்றார்.
புதிய கோள்கள் கண்டறியப் பட்டாலும், இக்கோள்களின் கூட்டுப் பொருள்கள்
(அல்லது எவற்றையெல்லாம் உள்ளடக்கி யவை) என்பது குறித்த அதிக விவரங்கள்
தெரியவில்லை. கடினமான தரை, நீர், அவை சுற்றி வரும் நட்சத்திரங்களிலிருந்து
அவற்றின் தொலைவு, உயிர்கள் வாழ்வதற்கான சூழல் ஆகியவை குறித்து
அறியப்படவில்லை. அந்தக் கோள்கள் அதிக வெப்ப முடையவையா, கடும் குளிர்
நிலவும் பிரதேசமா என்பன போன்ற விவரங்களும் அறியப்படவில்லை. ஆனால், தங்கள்
நட்சத்திரங்களை அவை பலமுறை கடப்பதை வானியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்த புதிய கோள்கள் அனைத் தும் கெப்ளர் நிறுவப்பட்ட 2009 மார்ச் முதல் 2011
வரையிலான காலகட்டங்களில் கண்டறியப்பட் டவை. புதிய பகுப்பாய்வு முறையின்
மூலம் அவை கடந்த புதன்கிழமை உறுதி செய்யப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள்
வரும் மார்ச் 10-ம் தேதி வெளிவரவுள்ள ஆய்விதழில் வெளியிடப்படவுள்ளன. tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக