வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

செங்கன் விசாவை மேலும் 16 தீவுக்கு விஸ்தரிக்கும் ஐரோப்பிய யூனியன் schengen visa new countries

ஐரோப்பிய யூனியனின் உறுப்பினர்களான 28 நாடுகளும் செங்கன் விசா திட்டத்தின்கீழ் பிற உறுப்பினர் நாடுகளுக்கு எந்த தனி விசா விதிமுறைகளும் இல்லாமல் சென்றுவர இயலும். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த இலவச விசா வருகையை 5 கரிபியன் தீவு நாடுகளுக்கும், 10 பசிபிக் தீவு நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் விஸ்தரித்தது. தற்போது மேலும் கரிபியன் மற்றும் பசிபிக் தீவுகளின் 16 சிறிய நாடுகள் உட்பட ஐக்கிய அரபுக் குடியரசு, பெரு, கொலம்பியா போன்ற நாடுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் வரக்கூடும் என்று ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் உள்நாட்டு அலுவல்கள் ஆணையாளர் சிசிலியா மால்ஸ்ட்ரோம் தெரிவித்தார். பெரு மற்றும் கொலம்பியா நாடுகளை இந்தத் திட்டத்தில் இணைத்தது நல்ல முடிவாகும். இவர்களுக்கு இலவச விசா பயணத்தை அளிப்பதன்மூலம் மக்கள் இடம்பெயரும் ஆபத்துகள் தவிர்க்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகின்றது. இதற்குத் தேவையான கூடுதல் மதிப்பீட்டினை விரைந்து தயார் செய்யவும் இந்த ஆணைக்குழு உறுதி கூறுகின்றது. இதற்குத் தேவையான நடைமுறைகள் தயார் செய்யப்பட்டவுடன் ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்கும் இந்தத் திட்டம் எளிதான நடைமுறைகளை அளிக்ககூடியதாக இருக்கும் என்றும் மால்ஸ்ட்ரோம் குறிப்பிட்டார். மேலும், இங்கிலாந்தின் குடியுரிமை பெறாமல் கடல் கடந்த பகுதிகளில் வசிக்கும் பிரிட்டிஷ் குடிமக்களின் சில பிரிவினருக்கும் இந்த விசா விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்திற்கான விசா விதிமுறைகள் அனைத்தும் முடிவடைந்தபின் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், மூன்றாம் நிலை நாடுகளுக்கும் விசா தள்ளுபடி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் இருதரப்பினரும் இலவச பயணம் மேற்கொள்ளலாம்.

2015-ம் ஆண்டில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் தெரிவித்துள்ளார். malaimalar.com

கருத்துகள் இல்லை: