சென்னை.பிப். 28- சென்னை பெரியார் திடலில்
அன்னை மணியம்மையார் அரங்கத் தில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின்
சார்பில் திமுக நாடாளு மன்றஉறுப்பினர் கவிஞர் கனிமொழி எழுதிய நூல்க ளுக்கான
விமர்சனக் கூட்டம் நேற்று (27.2.2014) மாலை நடைபெற்றது.
கவிஞர் கனிமொழி எழு திய கட்டுரை நூல்கள்,
கவிதை நூல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர், எழுத்தாளர் க. திருநாவுக்கரசு
விமர்சனம் செய்துபேசினார்.
கவிஞர் கனிமொழி ஏற் புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்துவதுபெரிய
விஷ யம்.கட்சிக் கூட்டங்கள் நடத் திடலாம். தமிழகத்தில் வாசிப்பு அந்த
நிலையில் உள்ளது. பல நூல்விமர்சனக் கூட்டங்களுக்கு நான் சென் றுள்ளேன்.
பெரியார் திடல் எனக்கும் கருவறைதான். என்னுடைய எழுத்துக்களில் எந்த
இடத்தில் மோதல் வரும் என்பது எனக்குத்தெரி யும். உங்களைப் போன்றவர் களிடம்
பேச நேரம் கிடைக் காதா என்று ஏங்குகிறேன். உங்களுக்கு நேரம் இருக்க
வேண்டும். ஏனென்றால், உங்களிடம் பேசும்போது கிடைக்கும் அனுபவம் ஒரு
புத்தகத்தைப் படித்தால் கூடக்கிடைக்காது. நீங்கள் ஒதுக்கித் தரும்அந்த
நேரத் திற்காகக் காத்திருக்கிறேன்.
கவிதையில் பிடிபட வில்லை, பொய் இருக்கிறது
என்கிறீர்கள். நான் மிகவும் உண்மையாக இருப்பது கவிதையில்தான். ஒரு கவிதை
எழுதும்வரைதான் அது என் கவிதை. எழுதி முடித்தபின் அது வாசகரு டையது.
வாசிப்பவர் தன் அனுபவத்தைக் கவிதையின் பின்னால் வாசகரின் அனு
பவம்இருக்கும்.கவிதை ஒரு நிலைக்கண்ணாடிமாதிரி. அனுபவத்தைத் தாண்டி
வந்தால்தான் புரியும்.
மொழிபெயர்ப்பில் பல விஷயங்கள் தொலைந்து
விடும். ஒரு கவிதை தமிழில் எழுதப்பட்டு, நமக்கென்று இருப்பது கவிதை, அதையே
நமக்கு தொடர்பில்லாத வேறு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, மீண்டும்
தமிழில் மொழிபெயர்க்கப் படும் போது பல விஷயங் கள் தொலைந்து போகும்.
ஆண்கள் மனதில் இல்லாத வார்த்தை பெண்
விடுதலை. பிறக்கும்போதே விடுதலை உணர்வுடன் உள்ளவர்கள் ஆண்கள். ஆனால்,
பெண்கள் அது இல்லாமல் பிறந்தவர் கள். ஆண்களாக சொல்லி தரும் எந்த
விடுதலையும் எங் களுக்கு வேண்டாம். நீங்கள் வரையறுக்க முடியாத கோடு போட
முடியாத , யாரும் வழங்கி பெறுவது விடுதலை இல்லை. நாங்கள் நாங்களா கத்
தேடும் விடுதலை. ஆண் கள் கீழே போட்டு மிதித்திட மெத்மெத்தென்று பெண்கள்
இருந்து விட்டார்கள்.
பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் என்று
வரும் போது அந்தப் பெண்ணிடம் நியாயம் கேட்கும் நிலை தான் உள்ளது. அவமானம்
அவளுக்கும், அவள் பெற் றோருக்கும். காவல் நிலை யத்தில் எந்த உடை என்று
கேள்வி கேட்கிறார்கள். பக் கத்து வீட்டார் அந்த நேரத் தில் ஏன் போனாள்
என்கி றார்கள். தனியே ஏன் சென்றாள் என்கிறார்கள். பெண்கள் தினமும் வேதனை,
வலி இருப்பதை நினைக்கக் கூட ஆண்கள் தயாராக இல்லை. குறும்படம்
பார்த்துவிட்டு நண்பர் ஒருவர் அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். ஆண் வேலை
முடித்து வீட்டுக்கு வரும்போது மனைவி காபி கொடுப்பார். ஏன் இதை மாற்றி
எண்ணிப்பார்க்கக் கூட முடியவில்லை?
ஒரு பெண் ஒரு நாளைக்கு 40 தோசைகள்
சுடுகிறார் என்று வருகிறது. அவர் வாழ்க்கை அதிலேயே முடிந்து விடுகிறது.
ஆயிரக்கணக் கான, இலட்சக்கணக்கான பெண்கள் சமையலறையி லேயே முடங்கிப்போய் விடு
கிறார்கள். பெண்களுக்கு எல்லைகள் அற்ற விடுதலை வேண்டும். நான் கச்சேரிக்கு
செல் வதைப்பற்றி சொன்னார்கள். அவரும் அங்கு வந்தவர் தானே? கச்சேரி
நடக்கும் இடங்களில் 2,3 பேர் மட் டுமே பார்ப்பனர் அல்லாத வர்களாக
இருப்பார்கள். நமக்கென்று இருந்ததை தாரைவார்த்துக் கொடுத்து விட வேண்டுமா?
பரத நாட் டியம் என்னுடையது. இசை எனக்கும் பாத்யதையானது. ஏன்
விட்டுக்கொடுக்க வேண் டும்? மல்லிகா நடன நிகழ்ச்சி வரும். பெண் கருக்கலைப்
புக்கு வருவாள். பெண் மருத் துவர் கேட்பார் நீயும் பெண் தானே? ஒரு தாய்தானே
இப்படி கருவைக்கலைக்க லாமா? அதற்கு அந்தத் தாய் சொல்லுவாள் உனக்கென்ன?
டாக்டராகி நகரில் இருக்கிறாய். நான் 5 பிள்ளைகளோடு கணவனோடு சேர்ந்து வாழ
வேண்டாமா? இந்த குழந்தையோடு சென்றால் நான் கணவனைவிட்டு வெளியேற வேண்டி
இருக்கும் என்பாள். திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்களால்
பாராட்டு பெற்றதைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்.
நான் எங்கிருந்தாலும், என் கருவறை, எனக்குரிய இடம் இந்தப் பெரியார் திடல்தான் என்றார் கவிஞர் கனிமொழி.
முன்னதாக வாசகர் வட்ட துணை செயலாளர் த.சுப்பிரமணியன் வரவேற்றார். பெரியார் பற்றிய பாடலை விஜயா தாயன்பன் பாடினார்.
தொமுச பேரவை (உழைப்பாளர் இதழாசிரியர்)
நிர்வாகி அ.சி.அருணகிரி தொடங்க உரை ஆற்றினார். திமுக கலை இலக்கியப்
பகுத்தறிவுப் பேரவை மாநிலத் தலைவர் கவிஞர் கனிமொழி, திராவிடர் இயக்க
ஆய்வாளர் க.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வாசகர் வட்ட செயலாளர் சத்திய
நாராயண்சிங் பயனாடை மற்றும் கேடயம் வழங்கினார். வாசகர் வட்டப் பொருளாளர்
கு.மனோகரன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக