புதன், 26 பிப்ரவரி, 2014

சவுதி அரேபியாவில் நீதிபதிகளுக்கு பயிற்சி மையங்கள் ! Too late Too little ?

இந்தப் பயிற்சி மையங்கள் நாட்டின் மத மற்றும் கலாச்சார அடையாளத்துக்கான அச்சுறுத்தல் என்று இங்குள்ள பழைமைவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், ஆனால்  சவூதி மன்னர் குடும்பங்கள் முழுக்க முழுக்க அமேரிக்க கலாசாரத்திலேயே வாழ்கின்றனர் , அப்பாவிகளுக்குதான் சமயம் கொள்கை கோட்பாடெல்லாம் 
அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பணிபுரியும் நீதிபதிகள் அனைவரும் மதகுருமார்களாகவே இருக்கின்றனர். இவர்கள் கடுமையான இஸ்லாமிய சட்டங்களையே அனைத்து வழக்குகளிலும் பயன்படுத்துகின்றனர். முன்னுதாரணங்களோ, குறிப்புகளோ இல்லாமல் தீர்ப்பு வழங்க இந்த நீதிபதிகள் அதிகாரம் உடையவர்களாக இருக்கின்றனர். ஆனால், இத்தகைய நடைமுறையினால் இவர்களது தீர்ப்புகள் முரண்பாடுகளைக் கொண்டதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். தற்போதைய நடைமுறையில் முதல் விசாரணை நடைபெறும் குற்றவியல் மற்றும் தனிப்பட்ட வழக்குகளைக் கொண்ட இரண்டு பிரிவு நீதிமன்றங்களிலும் ஷரியா விதிகளே கடைப்பிடிக்கப்படுகின்றன. ஷரியா விதிமுறைகள் முறையாக நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவத்தில் இல்லை. அதனால் நீதிபதிகள் பொதுவான இஸ்லாமிய சட்ட விதிகளுக்குப் பொருந்தும்படியான குரான் விளக்கங்களையோ அல்லது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை நடைமுறை மற்றும் உதாரணங்களைக் கொண்ட சுன்னா விளக்கங்களையோ தங்களின் தீர்ப்புகளுக்கு எடுத்துக் கொள்கின்றனர்.
இந்த நடைமுறையானது சீரற்ற, கேள்விக்குரிய தீர்ப்புகளுக்கு வழி வகுக்கின்றது என்று மனித உரிமைக் குழுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இத்தகைய நடைமுறைகள் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில்லை என்று தொழில்துறை நிறுவனங்களும் குறை கூறுகின்றன.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவும்விதமாக நீதித்துறை அமைச்சகம் நீதிபதிகளுக்கான பயிற்சி மையங்களைத் திறக்க இருப்பதாக நேற்று அறிவித்துள்ளது. இந்த மையத்தில் நீதிபதிகளின் திறமை மற்றும் செயல்திறன் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த ஆண்டு ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான நீதிபதிகள் இரண்டு வெளிப்படையான கடிதங்களில் கையெழுத்திட்டு மன்னர் அப்துல்லாவிடம் அளித்திருந்தனர். அவற்றில் ஒன்று இத்தகைய பயிற்சி மையங்கள் மேற்கத்திய தாக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சி மையங்கள் நாட்டின் மத மற்றும் கலாச்சார அடையாளத்துக்கான அச்சுறுத்தல் என்று இங்குள்ள பழைமைவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை: