நிதிநெருக்கடியால் சிக்கித் தவிக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், தலைமை செயல் அதிகாரி உட்பட பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்காத காரணத்தால் தற்காலிகமாக தமது சேவைகளை நிறுத்தியிருக்கிறது.
விமான நிறுவனங்களில் கலாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நீல் ரெய்மண்ட்டின் ஊதியம் ரூ1.75 கோடியிலிருந்து ரூ4.98 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு அடுத்த பட்டியலில் இருப்பது கிங்பிஷரின் சஞ்சய் அகர்வால்தான்! இவர் 2010-11ம் ஆண்டில் ரூ2.12 கோடி ஊதியம் பெற்றார். 2011-12ல் இது ரூ4.01 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பது தனிக்கதை!3-வது இடத்தில் ஜெட் ஏர்வேஸின் சரோஜ் தத்தா... இவரது ஊதியம் ரூ2.11 கோடி.!
விஜய் மல்லையாவின் பல்வேறு குழுமங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளும் போட்டி போட்டிக் கொண்டு ஆளுக்கு பல கோடி ஊதியம் பெற்றிருக்கின்றனர்! ஆனால் ஓராண்டாக பணியாளர்கள்தான் சல்லிப் பைசா இல்லாமல் தத்தளித்து தற்கொலை வரைக்கும் போக நேரிட்டிருக்கிறது என்பதுதான் கொடுமை
நிதிநெருக்கடியால் சிக்கித் தவிக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், தலைமை செயல் அதிகாரி உட்பட பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்காத காரணத்தால் தற்காலிகமாக தமது சேவைகளை நிறுத்தியிருக்கிறது.
விமான நிறுவனங்களில் கலாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நீல் ரெய்மண்ட்டின் ஊதியம் ரூ1.75 கோடியிலிருந்து ரூ4.98 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு அடுத்த பட்டியலில் இருப்பது கிங்பிஷரின் சஞ்சய் அகர்வால்தான்! இவர் 2010-11ம் ஆண்டில் ரூ2.12 கோடி ஊதியம் பெற்றார். 2011-12ல் இது ரூ4.01 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பது தனிக்கதை!3-வது இடத்தில் ஜெட் ஏர்வேஸின் சரோஜ் தத்தா... இவரது ஊதியம் ரூ2.11 கோடி.!
விஜய் மல்லையாவின் பல்வேறு குழுமங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளும் போட்டி போட்டிக் கொண்டு ஆளுக்கு பல கோடி ஊதியம் பெற்றிருக்கின்றனர்! ஆனால் ஓராண்டாக பணியாளர்கள்தான் சல்லிப் பைசா இல்லாமல் தத்தளித்து தற்கொலை வரைக்கும் போக நேரிட்டிருக்கிறது என்பதுதான் கொடுமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக