சனி, 13 அக்டோபர், 2012

வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை வேலூர் சிறையிலிருந்து ஸ்டாலின், கனிமொழி நேரில் வரவேற்பு

 Veerapandi Arumugam Released From Prison வேலூர்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து இன்று அவர் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். வேலூர் சிறையிலிருந்து விடுதலையான வீரபாண்டி ஆறுமுகத்தை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி, உள்ளிட்டட திமுக நிர்வாகிகள் நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சேலம் அங்கம்மாள் காலனி குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது உள்ளிட்ட வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட வீரபாண்டி ஆற்முகம் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலை வேலூர் சிறையில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டார். அவரை சிறைவாசலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்பளித்தனர்

கருத்துகள் இல்லை: