சனி, 13 அக்டோபர், 2012

மின்வெட்டு: தீபாவளி துணி தயாரிப்பு 60% டவுன்! விலைகள் எகிறும்!!

Viruvirup.com
 துணி உற்பத்தி ஆலைகளில் தினந்தோறும் 10 முதல் 14 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதால், தீபாவளிக்கு தயாராக வேண்டிய துணிகளில் 40 சதவீத துணிகளையே தயாரிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு துணி விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது என தெரியவருகிறது.
ஈரோட்டில் மட்டும் சுமார் 30,000 விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறிகளுக்கு ஒரு மாதமாக தினமும் 10 முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதால் துணி உற்பத்தி கடும் பாதிப்படைந்துள்ளது. முன்பு நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது வெறும் 4.5 லட்சம் மீட்டர் மட்டுமே துணி உற்பத்தியாகிறது.
ஏற்கனவே பால் விலையில் இருந்து, டீசல், கேஸ் வரை விலையுயர்வு கழுத்தை நெரிக்கும் நிலையில், தீபாவளிக்கு தயாராகும் 60 சதவீதம் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு தேவையான துணி உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, விலையும் உயரப் போகிறது.

கருத்துகள் இல்லை: