புதுடில்லி : ""எனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து,
காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகள், வாதப் பிரதிவாதங்கள் நடத்தினாலும்,
குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள, நான் தயாராகவே இருக்கிறேன்,'' என, காங்.,
தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும், அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் ஆகியோர், நேற்று முன்தினம் பரபரப்பு புகார் ஒன்றை வெளியிட்டனர்.
அதில், "காங்., தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வதேராவுக்கு, டில்லியைச் சேர்ந்த, டி.எல்.எப்., ரியல் எஸ்டேட் நிறுவனம், வட்டியில்லா கடனாக, 65 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. அதற்குப் பிரதிபலனாக, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில், டி.எல்.எப்., நிறுவனத்திற்கு, குறைந்த விலையில், நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என, புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, "முழுமையான விசாரணை நடத்த வேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து நேற்று விளக்கம் அளித்த ராபர்ட் வதேரா, ""எனக்கு எதிரான, ஊழல் குற்றச்சாட்டு குறித்த, எந்த ஒரு பிரச்னையையும் சந்திக்க தயாராக உள்ளேன்,'' என்றார்.
இதற்கிடையில், டி.எல்.எப்., நிறுவனமும், நேற்று தன்னிலை விளக்கம் அளித்தது.
அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:எங்கள் நிறுவனத்திற்கும், ராபர்ட் வதேரா மற்றும் அவரது நிறுவனத்திற்கும் இடையே, தனிப்பட்ட வகையில், வர்த்தகப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இது, முழுக்க முழுக்க, வெளிப்படையாகவும், ஒளிவுமறைவு இன்றியும் நடந்துள்ளது. உயர்ந்தபட்ச தொழில் தர்மமும், கடைபிடிக்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம், எந்தவொரு அரசிடமிருந்தோ, அதிகாரிகளிடமிருந்தோ, எந்த விதமான ஆதாயமோ, பலன்களோ பெறவில்லை. இவ்வாறு, டி.எல்.எப்., நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், டில்லியில் நேற்று, மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சந்தித்த நிருபர்கள், ராபர்ட் வதேரா மீதான, ஊழல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினர். "மத்திய அரசு தரப்பில், அந்த ஊழல் புகார் மீது, நடவடிக்கை எடுக்கப்படுமா' என, கேள்வி எழுப்பினர்.
அப்போது சிதம்பரம் கூறியதாவது:இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடந்துள்ள வர்த்தக பரிவர்த்தனைகளை, எப்படி முறைகேடு மற்றும் ஊழல் என, கூற முடியும். இருவர் தரப்பிலும், தங்களின் வர்த்தகப் பரிவர்த்தனை தொடர்பாக, வருமான வரித் துறையில் உரிய வகையிலான அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர். இதில், ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த விவகாரத்தில், இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை.இவ்வாறு சிதம்பரம் கூறினார். காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
பா.ஜ., தலைவர் ஸ்மிருதி இராணி கூறுகையில், ""இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டாலும் அது முறையாக நடைபெறாது; ஒருதலைப் பட்சமாகவே இருக்கும்,'' என்றார்.
இதற்கிடையே, ராபர்ட் வதேரா மீது, தான் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என, நிரூபணமானால், எந்தவொரு மான நஷ்ட வழக்கையும் சந்திக்க தயாராக இருப்பதாக, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மவுனம் சாதிப்பது ஏன் என்றும், கேள்வி எழுப்பியுள்ளா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக