பெருசு பெருசா கேட்டார் விஜய்: எஸ் ஏ சந்திரசேகரன்
துப்பாக்கி
படத்துக்காக பெரிய இயக்குநர், பெரிய ஹீரோயின், பெரிய ஒளிப்பதிவாளர் என
பெருசு பெருசா கேட்டார் விஜய். அவர் கேட்டது போல கொடுத்ததால்தான் நடிக்க
சம்மதித்தார் என்றார் எஸ்ஏ சந்திரசேகரன்.
துப்பாக்கி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ் ஏ சந்திரசேகரன் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. இந்தப் படம் உருவான விதம், அதற்கு விஜய் போட்ட நிபந்தனைகளையெல்லாம் அவர் சுவாரஸ்யமாக சொன்னார்.
எஸ்ஏசியின் பேச்சு:
விஜய் என் பிள்ளைதான் என்றாலும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் எனக்கு படம் பண்ண கால்ஷீட் தருவார்.
அப்படித்தான் துப்பாக்கிக்கும் கால்ஷீட் கொடுத்தார். இந்தப் படம் ஆரம்பிக்கும் முன்ப எனக்கு அவர் போட்ட கண்டிஷன்கள் கொஞ்சமல்ல.
எடுத்த எடுப்பில், எனக்கு பெரிய இயக்குநர்தான் வேண்டும் என்றார். உடனே நான் இயக்குநர் முருகதாஸை அணுகினேன். அவர் கேட்ட சம்பளம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.
அதற்காக அவரை குறை சொல்ல முடியாது. மார்க்கெட்டில் அவருக்கு உள்ள மதிப்பை வைத்து சம்பளம் சொன்னார். சும்மா இருந்தால் சினிமாவில் அப்படிக் கேட்டுவிட முடியாதல்லவா... எனவே அவர் கேட்டதைத் தர சம்மதித்தேன். அப்படியும் என் மகனுக்கு நம்பிக்கையில்லை. முதலில் அவருக்கு அட்வான்ஸ் கொடுங்கள், அப்புறம்தான் நான் வாங்குவேன் என்றார். சரி என்று கொடுத்தேன். அப்படியும் அவருக்கு நம்பிக்கையில்லை. போன் செய்து கேட்டு உறுதிப் படுத்திக் கொண்ட பிறகுதான் வாங்கிக் கொண்டார்.
அடுத்து பெரிய ஒளிப்பதிவாளர் வேண்டும் என்றார். சந்தோஷ் சிவனை ஒப்பந்தம் செய்தோம்.
பெரிய ஹீரோயின் வேண்டும் என்றார். ஒரு மேனேஜரைப் பிடித்து காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தோம். காஜலில் கால்ஷீட் கூட ஈஸியாகக் கிடைத்துவிட்டது.. ஆனால் அந்த மேனேஜர் கால்ஷீட் கிடைப்பதுதான் அத்தனை கஷ்டமாக இருந்தது.
இப்படி எல்லாமே பெருசு பெருசாக வேண்டும் என விஜய் கேட்டதால் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அப்படியும் படம் ஏன் தாணு கைக்கு மாறியது என்று கேட்கலாம். அது அப்படித்தான். எனக்கென்று என்ன கிடைக்க வேண்டுமென இறைவன் நினைத்திருக்கிறானோ, அதுதான் கிடைக்கும்.
ஒருவிதத்தில் என்னை விட தாணுதான் இந்தப் படத்துக்கு பொருத்தமானவர். நான் ரொம்ப டார்ச்சர் பண்ணிவிடுவேன். அதுஎன்ன இது என்ன என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். எல்லாமே ஒரு ஒழுங்குக்குள் வரவேண்டும் என நினைப்பவன்.
தாணு அவர்களிடம் எதுவுமே கேட்டிருக்க மாட்டார். அவர் சுபாவம் அப்படி. பெரும்பாலும் மும்பையில்தான் இந்தக் குழு தங்கியது. பல முறை போய்வந்தது. அதில் எத்தனை முறை தாணுவும் கூடப் போயிருப்பார் என்று கேட்டுப் பாருங்கள்.. ஒருமுறை கூட போயிருக்கமாட்டார். அவர் அப்படித்தான்.
-இவ்வாறு எஸ்ஏசி பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக