வியாழன், 20 அக்டோபர், 2011

கலவரத்தை தூண்டியதாக நடிகர் அமிதாப்பச்சன் மீது வழக்கு

1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை தூண்டியதாக நடிகர் அமிதாப்பச்சன் மீது வழக்கு
மெல்பர்ன் அக்.19 (டிஎன்எஸ்) பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் மீது ஆஸ்திரேலியா நீதிமன்றம் ஒன்றில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிட்னியில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அமிதாப்பச்சன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். மேலும் குயின்ஸ்லாண்ட் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டமும் அளிக்க இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கவாழ் சீக்கியர்கள் அமைப்பு இந்த புகாரை கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்திஇ அவருடைய மெய்க் காப்பாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் உயிரிழந்தார்கள். அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர் மனித உரிமை அமைப்பு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டு சட்டத்தின்படி மனித உரிமை மீறல் எங்கு நடைபெற்றிருந்தாலும் அது குறித்து ஆஸ்திரேலியாவில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க முடியும். அந்த அடிப்படையில் அமிதாப்பச்சன் மீது சீக்கியர் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை: