சனி, 22 அக்டோபர், 2011

யாழ் பல்கலைகழகமும் ராகிங் காடுமிராண்டிகளும்

விழுந்தது அறை, வெடித்தது செவிப்பறை - யாழ் பல்கலை ராகிங்விழுந்தது அறை, வெடித்தது செவிப்பறை - யாழ் பல்கலை ராகிங்
தமது மாணவர் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள், புதுமுக மாணவர்கள் மீது தொடர்ந்தும் ராகிங் என்ற போர்வையில் தாககுதல் நடத்திவருவதாக முறையிடப்பட்டுள்ளது.

புதுமுக மாணவர்கள் வெட்கம், தயக்கம் நீங்கி பல்கலைக்கழக சமூகத்துடன் இயல்பாக ஒன்றித்து வாழக் கற்றுக்கொடுப்பதற்காக என்று சொல்லப்படும் ராகிங், நீண்ட காலமாகவே வன்முறையும், வக்கிரமும் நிறைந்ததாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து வருகிறது.
யாழ் பல்கலைகழகமும் ராகிங் காடுமிராண்டிகளும்
அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற சாக்கில் வன்முறை ரீதியான தாக்குதல்கள் புதுமுக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படுவது அதிகரித்திருப்பதாக மாணவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகங்களில் ராகிங் முழுமையாகத் தடைசெய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்திருந்தும், யாழ் பல்கலைக்கழகத்தில் மோசமான ராகிங் கலாசாரம் நிலவுவதாக புதுமுக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் புதுமுக மாணவர் ஒருவருக்கு சிரேஷ்ட மாணவர் கன்னத்தில் அறைந்ததில் அவரது செவிப்பறை வெடித்து தற்போது அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல மாணவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், அச்சம் காரணமாக அவர்கள் இதுபற்றி வெளியில் தெரிவிக்காமல் மௌனமாக இந்த ராகிங் கொடுமைகளைச் சகித்து வருவதாகவும் மாணவ வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. அதிலும், புதுமுக மாணவிகள் மீது மிகவும் பாலியல் வக்கிரம் நிறைந்த ராகிங் நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாககுதலை எதிர்த்து எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுவரும் சூழ்நிலையில், இதே மாணவர்கள் மத்தியில், புதுமுக மாணவர்களை இலக்கு வைத்து இவ்வாறு மோசமான வன்முறைகள் மேற்கொள்ளப்படுவது, வன்முறைகளுக்கு எதிரான அவர்களது குரலின் தார்மீக நியாயத்தைக் கேள்விக்குள்ளாக்காதா என்று, செவிப்பறை பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் மாணவரின் உறவினர்கள் வேதனையுடன் கேட்டனர்.
www.adaderana.lk

கருத்துகள் இல்லை: