வியாழன், 20 அக்டோபர், 2011

தேர்தலில் பணம் பட்டுவாடா அதிமுகவின் அராஜகம்


எப்படியாவது அ.தி.மு.க வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பது அமைச்சர்களுக்கு மேலிடத்தின் உத்தரவு. இதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிவிடவேண்டும் என்பதிலும், அதற்காக, தேர்தல் விதிமுறைகள் பற்றி கவலைப்படுவதில்லை என்பதிலும் அமைச்சர்கள் தெளி வாகவே இருந்தார்கள். அதற்கு ஒரு உதாரணம், கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜூவின் வாக்குப்பதிவு நாள் நடவடிக்கைகள்.

மதுரையில் அ.தி.மு.க மேயர் வேட்பாளராகப் போட்டியிடும் ராஜன்செல்லப்பாவை ஜெயிக்க வைத்தாக வேண்டும் என்பது செல்லூர் ராஜூவுக்கான அசைன்மெண்ட். முதல்கட்ட தேர்தல் நடந்த அக்டோபர் 17ந் தேதியன்று மதுரை அரசினர் மீனாட்சிக் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார் செல்லூர் ராஜூ.
அதன் பின் நடந்ததை, பின்வரும் புகைப்படங்கள் நிரூபிக்கின்றன.
படம் : 1
குடும்பத்தினரோடு வாக்குச் சாவடிக்கு வருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
படம் : 2
வாக்குப்பதிவு செய்ததும், இரட்டை இலை சின்னத்தை சிம்பாலிக்காக விரலில் காட்டி போஸ் கொடுக்கிறார். தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்குச்சாவடியில் காத்திருக்கும் வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்யும் நடவடிக்கை இது.
படம் : 3
வாக்களித்துவிட்டு வெளியே வந்ததும், அங்கே இருந்த ஒருவரை அழைத்து, பணக்கட்டைப் பிரிக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ
படம் : 4
500 ரூபாய் நோட்டை பகிரங்கமாக விநியோகிக்கிறார் அமைச்சர்.
தேர்தல் விதிமுறைகளை காலில் போட்டு மிதிப்பதுபோல, வாக்குச்சாவடிக்குள்ளும் வெளியேயும் அமைச்சர் செல்லூர் ராஜூ நடந்துகொண்டதை தேர்தல் அதிகாரிகளோ, போலீசாரோ கண்டு கொள்ளவுமில்லை. தடுக்கவுமில்லை. மற்ற அமைச்சர் களும் தங்கள் மாவட்டங்களில் இதே பாணியிலேயே செயல்பட்டனர்.

-முகில்
படங்கள் : அண்ணல்

thanks nakkeeran+raj trichy

கருத்துகள் இல்லை: